ரெட் அலர்ட் எச்சரிக்கை.. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், தாம்பரம் உதவி எண்கள் அறிவிப்பு.. லிஸ்ட்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் நாளை கனமழை காரணமாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று 4 மாவட்டங்களிலும் மழை பாதிப்பு தொடர்பான உதவிகளுக்கு கட்டணமில்லா எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. கட்டுப்பாட்டு அறைகளும் அமைக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் நாளை பல்வேறு மாவட்டங்களில் அதி கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சென்னை மற்றும் திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு சிவப்பு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த 4 மாவட்டங்களில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தமிழக அரசு சார்பில் எடுக்கப்பட்டுள்ளது.

chennai rain

மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மேற்கண்ட 4 மாவட்டங்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் என்னென்ன பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் என்ற அறிவுறுத்தல்களும் தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ளன. இதேபோல் வெள்ள பாதிப்புகளில் சிக்காமல் இருக்கவும், மழை தொடர்பான புகார்களுக்கும் இலவச உதவி எண்கள் அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ளன.

சென்னை:

சென்னை பெருநகர மாநகராட்சி சார்பிலும் இலவச உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அனைத்து உதவிகளுக்கும் 1913 என்ற இலவச தொலைபேசி எண்னை தொடர்புகொள்ளலாம். இதேபோன்று +91 9445551913 என்ற வாட்ஸ் அப் எண்ணிலும் தொடர்புகொண்டு உதவிகள் கேட்கலாம். எந்த உதவிகள் தேவைப்பட்டாலும் இந்த எண்களுக்கு தொடர்பு கொள்ளலாம் என்று சென்னை பெருநகர மாநகராட்சி தெரிவித்துள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம்:

இதேபோன்று காஞ்சிபுரம் மாவட்டத்தில் மழை, வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்ட பேரிடர் மேலாண்மை ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பேரிடர் காலங்களில் மற்றும் பேரிடர் இடர்பாடுகள் தொடர்பான புகார்களை தெரிவிக்க 044 27237107 என்ற தொலைபேசி எண்களிலும், 8056221077 என்ற செல்போன் எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம்:

செங்கல்பட்டு மாவட்டத்திலும் நாளை கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பதால் முன்னெச்செரிக்கை நடவடிக்கையாக செங்கல்பட்டு மாவட்ட மக்களுக்காக அவசரகால உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, 1077 என்ற எண்ணிலும், 044-27427412 மற்றும் 044-27427414 என்ற எண்களிலும் தொடர்பு கொள்ளலாம். இதேபோன்று 9944272345 என்ற செல்போன் எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம்:

திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. எனினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழை தொடர்பான புகார் அளிப்பதற்கும், வெள்ள பாதிப்பு உதவிகள் கேட்பதற்கும் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. 1070 மற்றும் 1077 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாம்பரம்:

தாம்பரம் மாநகராட்சி சார்பில் மழைக்கால் அவசர உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, மழை தொடர்பான புகார்கள் மற்றும் உதவிகள் கோர 1913 என்ற ஹெல்ப்லைனுக்கு தொடர்பு கொள்ளலாம். இதேபோன்று 18004254355, 1804251600 ஆகிய எண்களிலும், 8438353355 என்ற வாட்ஸ் - அப் எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+