சென்னையில் மீண்டும் திடீர் மழை.. ஆனா நேத்து போல இருக்காது! வெதர்மேன் அப்டேட்
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னையில் இன்று இரவு மீண்டும் கனமழை தொடங்கியிருக்கிறது. ஆனால் நேற்று போல மழை தீவிரமாக இருக்காது என தனியார் வானிலை ஆய்வாளர் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்திருக்கிறார்.
கோயம்பேடு, அண்ணாநகர், வில்லிவாக்கம், பாடி, அயனாவரம், கொளத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் தற்போது கனமழை பெய்து வருகிறது.

மழை குறித்து வெதர்மேன் கூறுகையில், "நள்ளிரவு மழை மேகங்கள் மீண்டும் வந்துவிட்டன. நேற்று போல் அல்லாமல், இன்றைய மழை மேகங்கள் சிறியதாகவும், அதிக தீவிரம் இல்லாததாகவும் இருக்கிறது. சென்னை நகரின் சில பகுதிகளில் வழக்கம் போல் வெப்பச்சலனம் காரணமாக குறுகிய, தீவிர மழைப் பொழிவை எதிர்பார்க்கலாம். சில பகுதிகளில் சுமாரான மழை பெய்யும், மற்ற சில பகுதிகளில் மழை பெய்யாமல் போகவும் வாய்ப்புள்ளது" என தெரிவித்திருக்கிறார்.












Click it and Unblock the Notifications