நகராமல் அங்கயே நீடிக்கும் மழை.. சென்னையில் 203 வெள்ள அபாய பகுதிகள்.. ரவுண்டு கட்டிய ஆபீசர்ஸ்.. கவனம்
சென்னை: சென்னையில் கனமழை பெய்து வருவதையடுத்து, 203 வெள்ள அபாய பகுதிகள் கண்டறியப்பட்டுள்ளன.. இதையடுத்து, 80 கமாண்டோ வீரர்கள் 24 மணி நேரமும் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.. வெள்ள அபாய பகுதிகளை தங்கள் கண்காணிப்பில் வைத்திருக்கிறார்கள்.
சென்னையில் ரெட் அலர்ட் அறிவிப்பை தொடர்ந்து, அனைத்து துறை அதிகாரிகளும் தீவிர கண்காணிப்பில் இறங்கியிருக்கிறார்கள்.. மழை அதிகம் பெய்யும் வாய்ப்புள்ள பகுதிகளில் தேசிய, மாநில பேரிடர் குழுவினர் முகாமிட்டு நிலைமையை கண்காணித்து வருகின்றனர்..

சென்னையில் உள்ள 42 தீயணைப்பு நிலையங்களில் 1,300 தீயணைப்பு படை வீரர்கள் பணியில் உள்ளார்கள். பல்வேறு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு, ரெட் அலர்ட்டும் விடுக்கப்பட்டு உள்ளது.
கனமழை: பருவமழை ஆரம்பமானதையடுத்து, சென்னையில் நேற்று நள்ளிரவு கனமழை பலமாக கொட்டியது.. சுமார் ஒரு மணி நேரம் இடி, மின்னலுடன் மழை கொட்டி தீர்த்தது. இதில், சென்னையில் ஒரு மணி நேரத்தில் 5 சென்டிமீட்டர் அளவுக்கு மழை பெய்தது.. சென்னை மாநகராட்சியில் அதிகபட்சமாக உத்தண்டியில் 6.4 செ.மீ மழை பதிவாகியிருக்கிறது.
வடபழனி, நுங்கம்பாக்கம், மீனம்பாக்கம், அடையாறு ஆகிய பகுதிகளில் 6 செ.மீ மழை பதிவானது. வேளச்சேரியில் 5.5 செ.மீ மழைப்பொழிவும், ராயப்பேட்டை, சோழிங்கநல்லூர், பாலவாக்கம், அண்ணா நகர் ஆகிய பகுதிகளில் 5 செ.மீ மழைப்பொழிவும் பதிவானது. ராயபுரம், பேசின் பிரிட்ஜ், பெரம்பூர், மணலி பகுதிகளிலும் 5 செ.மீ மழைப்பொழிவு பதிவாகியிருக்கிறது.
வங்கக்கடல்: வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியால், 2 நாட்களுக்கு முன்பே சென்னையில் வெள்ள அபாயம் பற்றின கலக்கம் எழுந்தது.. சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 43 இடங்களில் உள்ள மழைநீர் வடிகால்களில் இணைப்புப் பணி நிறைவடையாமலேயே இருந்ததால், அந்த பணிகளை விரைந்து முடிக்க மாநகராட்சி அறிவுறுத்தியிருந்தது..
மேலும், சென்னையில் மழைநீர் தேங்கக்கூடிய 25 இடங்கள் உட்பட 180 வெள்ள அபாய பகுதிகள் கண்டறியப்பட்டு கூடுதல் கவனம் செலுத்த உத்தரவிடப்பட்டது.. அதாவது, கடந்த வருடம் பெய்த மழையால் சென்னையில் வெள்ளம் பாதிக்கப்பட்ட இடங்கள்தான் இந்த 180 அபாய பகுதிகளாகும். அதனால்தான், இந்த முறை 180 வெள்ள அபாய பகுதிகளிலும் கூடுதல் கவனம் செலுத்த சென்னை மாநகராட்சி உத்தரவு பிறப்பித்து, கண்காணிப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற வேண்டும் என்று அறிவுறுத்தியிருந்தது.
வெள்ள பாதிப்பு: ஆனால், இந்த வெள்ள அபாய பகுதிகளின் எண்ணிக்கையானது, நேற்றைய கனமழை காரணமாக கூடியிருக்கிறது. சென்னையில் வெள்ள அபாய பகுதிகளில் கண்டறியப்பட்டு உள்ள இடங்களில் அதிகாரிகள் கூடுதல் கண்காணிப்பு நடவடிக்கைகளில் இறங்கி இருக்கின்றனர். அந்தவகையில், சென்னையில் வெள்ள அபாய பகுதிகளாக கண்டறியப்பட்டு உள்ள 203 இடங்கள் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளன.
சென்னையில் 42 தீயணைப்பு நிலையங்களில் 1300 தீயணப்பு படை விரர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.. வெள்ள மீட்பு பணியில் ஈடுபடுவதற்காக 40 படகுகள், 40 மோட்டார்கள் தயாராக வைக்கப்பட்டுள்ளன.. 80 கமாண்டோ வீரர்கள் 24 மணி நேரமும் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.. இவர்கள்தான் சென்னையின் வெள்ள அபாய பகுதிகளாக 203 இடங்களை கண்காணிப்பில் வைத்திருக்கிறார்கள்.
போலீஸ் ஸ்டேஷன்: மழை வெள்ளம் காரணமாக, தாழ்வான பகுதிகளாக கண்டறியப்பட்டுள்ள இடங்களிலுள்ள, போலீஸ் ஸ்டேஷன்களை இடமாற்றம் செய்யும் நடவடிக்கைகளும் சென்னையில் ஆரம்பமாகி உள்ளன. அதேபோல, பழமையான கட்டிடத்தில் இயங்கி வந்த திருவல்லிக்கேணி சட்டம், ஒழுங்கு காவல்நிலையம், ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனைக்கு தற்காலிகமாக மாற்றப்பட்டிருக்கிறது.
கனமழை எச்சரிக்கை திரும்ப பெறப்பட்ட பிறகு, மறுபடியும் பாரம்பரிய கட்டிடத்துக்கே திருவல்லிக்கேணி போலீஸ் ஸ்டேஷன் மாற்றப்படும் என்று காவல்துறை உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications