சென்னையில் கொட்டித் தீர்த்த கனமழை! தமிழகத்தில் வருண பகவான் இன்று எங்கெல்லாம் கருணை காட்டுவார்?
சென்னை: சென்னையில் நேற்று நள்ளிரவு பெய்த கனமழை வெயிலின் தாக்கத்தைக் குறைத்து, குளிர்ச்சியான சூழலை உருவாக்கியுள்ளது. தமிழகத்தில் இன்று எங்கு மழை பெய்யும், வெயில் காலத்தில் மழைக்கான காரணம் என்ன என்பதைப் பார்க்கலாம்.

சென்னையில் மழை நிலவரம்
சென்னையில் கடந்த சில நாட்களாக மாலையிலோ அல்லது இரவிலோ மழை பெய்து வருகிறது. எனினும், மறுநாள் காலை மழை பெய்ததற்கான சுவடே தெரியாமல் வெயில் சுட்டெரிக்கிறது. நேற்று இரவு முதல் சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் குளிர்ச்சியான காற்று வீசியது. கோடம்பாக்கம், பெரியார்பாதை, சூளைமேடு, நுங்கம்பாக்கம், கோயம்பேடு, அரும்பாக்கம், ஆயிரம் விளக்கு, முகப்பேர், அம்பத்தூர், நெற்குன்றம் உள்ளிட்ட பகுதிகளில் மழை பதிவாகியுள்ளது.
தமிழகத்தில் மழைக்கான வாய்ப்பு
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, தென்னிந்தியப் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக அடுத்த சில நாட்களுக்குத் தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இன்று (ஜூலை 18, 2025):
தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
ஓரிரு இடங்களில் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த தரைக்காற்று வீசக்கூடும்.
நீலகிரி மாவட்டம் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தேனி, தென்காசி, செங்கல்பட்டு, திருவள்ளூர், சென்னை, ராணிபேட்டை, காஞ்சிபுரம், வேலூர், விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னையைப் பொறுத்தவரை:
வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான அல்லது கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.
அதிகபட்ச வெப்பநிலை 35-36∘
செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27∘
செல்சியஸ் ஆகவும் இருக்கும்.
ஜூலை 19, 2025 மற்றும் ஜூலை 20, 2025:
தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
ஓரிரு இடங்களில் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த தரைக்காற்று வீசக்கூடும்.
நீலகிரி மாவட்டம் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தேனி, திண்டுக்கல் மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
ஜூலை 21, 2025
தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
ஓரிரு இடங்களில் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த தரைக்காற்று வீசக்கூடும்.
நீலகிரி மற்றும் தேனி மாவட்டங்கள் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
ஜூலை 22, 2025
தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை
ஜூலை 18, 2025 முதல் ஜூலை 20, 2025 வரை: தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் சூறாவளிக் காற்று வீசக்கூடும்.
ஜூலை 21, 2025: தமிழக கடலோரப் பகுதிகள், ஆந்திர கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் சூறாவளிக் காற்று வீசக்கூடும்.
மீனவர்கள் மேற்கண்ட நாட்களில் கடலுக்குச் செல்ல வேண்டாம் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.
-
After Super Soodu... சென்னை உள்பட 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! கண்டிஷனுடன் சொன்ன வெதர்மேன் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
வெளுத்து வாங்கப் போகும் கனமழை! இரவோடு இரவாக 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! வானிலை மையம் எச்சரிக்கை -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய்












Click it and Unblock the Notifications