செங்கல்பட்டு டூ காஞ்சிபுரம்.. ஒரே நாள் கனமழையில் முழுசும் நனைந்த கிளாம்பாக்கம்.. விடிய விடிய பெருமழை
சென்னை: கிளாம்பாக்கம், முடிச்சூர், புழல், செங்குன்றம், மாதவரம் உள்ளிட்ட சென்னையின் புறநகர் பகுதிகளில் மழைநீர் தேங்கியிருப்பது பொதுமக்களை சிரமத்துக்கு உள்ளாக்கி வருகிறது.
இலங்கையை ஒட்டியுள்ள பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால், தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிவந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியானது, வலுப்பெற்றுள்ளது..

கனமழை: இது மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, வடமேற்கு திசையில் நகர்ந்து தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் புயலாக வலுப்பெறக்கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே பருவழை பலமாக பெய்து வரும்நிலையில், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை அடுத்தடுத்து பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தொடர்ந்து அறிவித்துள்ளது. அந்தவகையில், சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் நேற்று காலை முதலே விட்டுவிட்டு கனமழை பெய்தது. நேற்று மாலையில் மீண்டும் துவங்கிய மழை, இரவெல்லாம் வெளுத்து வாங்கியது.
சென்னை புறநகர்: இதனால், நேற்றிரவு பணி முடிந்து வீடு திரும்புபவர்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளானதுடன், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மிகுந்த போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது..
குறிப்பாக புழல், செங்குன்றம், மாதவரம், சோழவரம், பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, சோழிங்கநல்லூர், உள்ளிட்ட பகுதிகளில் பெய்த கனமழையின் காரணமாக, சாலைகளில் தண்ணீர் தேங்கி நின்றது.. இதில் ஜிஎஸ்டி சாலை முழுக்க மழைநீர் பெருக்கெடுத்தது.. வண்டலூர் அடுத்த கிளாம்பாக்கம் புதிய பஸ் ஸ்டாண்டு பணிகள் நடந்து முடிந்து திறப்பு விழாவுக்கு தயாரான நிலையில், பஸ் ஸ்டாண்டின் வாயிற்புறத்திலேயே மழைநீர் தேங்கிவிட்டது.
கிளாம்பாக்கம்: சாலையின் 2 அடிக்கு கீழே கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டு கட்டப்பட்டதால், சாலையில் பெருக்கெடுக்கும் மழைநீர் பஸ் ஸ்டாண்டுக்குள் புகுந்துவிடும் சூழல் ஏற்பட்டது. அதனால்தான், மழைநீர் சீராக செல்வதற்கு, ஜிஎஸ்டி சாலையில் பள்ளம் தோண்டி, குழாய்கள் அமைத்து பராமரிப்பு பணிகளும் நடந்தன..
ஆனாலும், தற்போது மழை பலமாக பெய்து வருவதால், பஸ் ஸ்டாண்டின் நுழைவாயிலிலேயே குளம்போல் நீர் தேங்கிவிட்டது. இரவு நேரத்தில் வாகனங்கள் இந்த பஸ் ஸ்டாண்டை கடக்க முடியாமல் திணறின.. தட்டு தடுமாறி, மெதுவாக ஊர்ந்தபடியே சென்றன. இது சம்பந்தமான வீடியோ ஒன்று நேற்று இணையத்தில் வெளியாகியிருந்த நிலையில், நேற்றிரவும் இதே நிலைமை நீடித்துள்ளது.
பீர்க்கங்கரணை: அதேபோல, தாம்பரம் பீர்க்கங்கரணை பகுதியிலும் தண்ணீர் தேங்கி நிற்கிறது.. குறிப்பாக, ஸ்ரீராம் நகர் பகுதியில் நேற்று மதியம் முழுவதும் பெய்த மழையால், வீடுகளை சுற்றி 2 அடிக்கு தண்ணீர் தேங்கி நிற்கிறது.. இதுபோல 4 தெருக்களில் தண்ணீர் சூழ்ந்துள்ளதால், பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
முடிச்சூர் பகுதிகளில் ஒருசில இடங்களில் மழைநீரும், கழிவுநீரும் தேங்கி நிற்பதாகவும், எப்போது மழை வந்தாலும் இதே நிலைமைதான் என்று அந்த பகுதியில் வசிப்பவர்கள் கூறுகிறார்கள். எனினும், மாநகராட்சி ஊழியர்கள் புறநகர் பகுதிகளுக்கு விரைந்திருப்பதுடன், தேங்கியிருக்கும் தண்ணீரை, வெளியேற்றும் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications