Chennai Rains: வலுவிழந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்.. சென்னையில் படிப்படியாக மழை குறையுமா?
சென்னை: வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்திருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வலுவிழந்த டிட்வா புயல், அடுத்த 12 மணி நேரத்திற்கு காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவே நீடிக்கும் என்று கூறியுள்ள நிலையில், அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடதமிழகத்தை அச்சுறுத்தி வந்த டிட்வா புயல் வலுவிழந்து, சென்னை அருகே ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மையம் கொண்டிருந்தது. கடந்த 18 மணி நேரமாக சென்னைக்கு அருகில் கிழக்கே 40 கிமீ தொலைவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக ஒரே இடத்தில் மையம் கொண்டிருந்ததால், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் கனமழை பெய்து வந்தது.

இதனால் சென்னையின் பல்வேறு பகுதிகளிலும் மழைநீர் தேங்கியது. இந்த நிலையில் சென்னை அருகே மையம் கொண்டிந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வழுவிழந்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மணிக்கு 3 கிமீ வேகத்தில் நகர்ந்து வருகிறது. இது அடுத்த 12 மணி நேரத்திற்கு காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நீடிக்கும்.
இதன்பின் கரையை நோக்கி நகர்ந்து, அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவிழக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அதேபோல் தமிழ்நாட்டில் இன்றும் ஓரிரு இடங்களில் அதி கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், 21 செமீ-க்கும் மேலாக அதி கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. இதனால் தமிழ்நாட்டிற்கு இன்றும் ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.
அதேபோல் தமிழ்நாட்டில் நாளை ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதால், ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் மாநகராட்சி ஊழியர்கள் அலர்ட் மோடிலேயே வைக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே 4 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள சூழலில், மழைநீர் தேங்காமல் இருக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
-
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
பொதுமக்களே உஷார்! இன்று 22 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை.. மஞ்சள் அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
வெளுத்து வாங்கப் போகும் கனமழை! இரவோடு இரவாக 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! வானிலை மையம் எச்சரிக்கை -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications