21 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையில் நடந்த அதிசயம்.. வெதர்மேன் சொன்னதை கவனிச்சீங்களா!
சென்னை: கடந்த 21 ஆண்டுகளில் இந்த மே மாதத்தில்தான் சென்னையில் வெயில் 40 டிகிரி செல்சியஸை தாண்டவில்ல என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கூறியுள்ளார்.
ஆனால் மாதம் முடிய இன்னும் 8 நாட்கள் பாக்கி இருப்பதாகவும், அப்படி 8 நாட்களும் சென்னையில் வெயில் குறைவாக பதிவாகியிருந்தால் அது மிகப்பெரிய அதிசய நிகழ்வாக இருக்கும் என்றும் கூறியுள்ளார்.

இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கும் அவர், "தமிழ்நாட்டில் இந்த மாதம் எந்த மாவட்டத்திலும் 40 டிகிரி அளவுக்கு வெயில் பதிவாகவில்லை. மாநிலத்தின் அதிகபட்ச வெப்பநிலையாக தூத்துக்குடியில் 38.4 டிகிரி செல்சியஸ் பதிவாகியிருந்தது. சென்னையில் கடந்த 2004ம் ஆண்டுக்கு பிறகு இந்த ஆண்டின் மே மாதத்தில்தான் 40 டிகிரியை வெடியில் தொடாமல் இருக்கிறது. இருப்பினும் மாதம் முடிய இன்னும் 8 நாட்கள் இருக்கின்றன. இதில் கவனிக்க வேண்டியது என்னவெனில் நுங்கம்பாக்கம் கடலுக்கு பக்கத்தில் இருப்பதால் அதிகாலை கடல் காற்று அதிகமாக வீசாது. எனவே வெயில் மிதமானதாக இருக்கும்.
ஆனால் மீனம்பாக்கம் அப்படிக்கிடையாது. மே மாதத்தில் இங்கு 40 டிகிரி வெயில் பதிவாகாமல் இருப்பது நிச்சம் அதிசயம்தான். மீனம்பாக்கத்தை பொறுத்தவரை கடந்த 1995ம் ஆண்டு 6 நாட்கள் மட்டும் 40 டிகிரி செல்சியஸ் அளவுக்கு வெயில் பதிவாகியிருந்தது. 2004ம் ஆண்டு, அந்த ஆண்டு முழுவதும் ஒரு நாள் கூட 40 டிகிரி வெயில் பதிவாகவில்லை.
இதே நுங்கம்பாக்கத்தை எடுத்துக்கொண்டால், 1995 மற்றும் 1999ம் ஆண்டுகளில் 40 டிகிரி அளவுக்கு வெயில் பதிவாகவில்லை. இது 2004 மற்றும் 2018ம் ஆண்டும் தொடர்ந்தது. ஆனால் 2022ம் ஆண்டு 2 நாட்கள் 40 டிகிரி அளவுக்கு வெயில் இருந்தது" என்று குறிப்பிட்டிருக்கிறார்.
முன்னதாக சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்திருந்த அறிக்கையில், அதிகபட்ச வெப்பநிலை மாறுதலின் போக்கை பொறுத்தவரை இன்றும் நாளையும் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில், ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 1-2° செல்சியஸ் வரை படிப்படியாக உயரக்கூடும். மே.24 முதல் 26ம் தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் சற்று குறையக்கூடும்.
இன்றும் நாளையும் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் 2-3* செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும். மே.24 முதல் 26 வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் இயல்பை ஒட்டி இயல்பை விட குறைவாக இருக்கக்கூடும்.
குறிப்பாக இன்றும் நாளையும் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும் இருக்கும் நிலையில் தமிழகத்தில் ஓரிரு பகுதிகளில் வெப்பம் சார்ந்த அசௌகரியம் ஏற்படலாம்" என தெரிவிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
-
ரூ. 20,000 கோடி 'ஸ்மார்ட் மீட்டர்' திட்டத்திற்கு மூடுவிழாவா? அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம் -
கமல், கார்த்திக் கூடதான் கட்சி ஆரம்பிச்சாங்க! என்னாச்சு? அண்ணாமலைலாம் ஒரு ஆளே இல்லை! முஸ்தபா விமர்சனம் -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
Real Estate: தமிழகத்தில் கட்டுமான பொருட்களின் விலை கிடுகிடு உயர்வு! வீடு கட்டுவோர் கவலை! -
அண்ணாமலையின் ஸ்கெட்ச்.. பாஜகவுக்கு இல்லை! அதிமுகவுக்குதான்! எடப்பாடி பழனிசாமி ஷாக்! -
பேய் மழை வெளுக்கப் போகுது.. கோவை, நீலகிரியில் மிக கனமழை! 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
செந்தில் பாலாஜி கைதாகிறாரா? தவெக கடிதத்திற்கு ஓகே சொன்ன ஆளுநர்! மறுபடியும் முதல்ல இருந்தா? -
2031 வரை அண்ணாமலை காத்திருக்க மாட்டார்.. அவரின் உண்மையான திட்டம் இதுதான்.. வெளியான தகவல்! -
திமுகவை சீண்டும் துரை வைகோ.. இன்னைக்கு என்ன சொல்லி இருக்காருன்னு பாருங்க! புது பஞ்சாயத்து -
இன்னைக்கும் மழை விடாது.. 14 மாவட்டங்களில் வெளுக்க போகுது! சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை மையம் -
விஜய் வந்தும் வேலைக்கு ஆகல! சர்ச்சையை கிளப்பும் சட்டம் ஒழுங்கு.. டிஜிபி அதிரடி உத்தரவு! -
பத்திரப்பதிவு செய்ய இனி சார் பதிவாளர் அலுவலகங்களுக்கு நேரில் செல்ல வேண்டாம்! தமிழக அரசு அதிரடி!












Click it and Unblock the Notifications