Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

குடையை மடக்காதீங்க.. சென்னை புறநகரில் விடிய விடிய மழை.. இன்று 29 மாவட்டங்களுக்கும் சம்பவம் இருக்கு

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் இரண்டு நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று வானிலை மையம் ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில், இன்று காலை 10 மணிக்கு 29 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது.. நேற்றிரவு முதல் சென்னை புறநகர் உள்ளிட்ட பகுதிகளில் விடிய விடிய மழை கொட்டிய நிலையில், இன்றும் மழை தொடரும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது.

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் நேற்றைய தினம் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவிப்பு வெளியிட்டிருந்தது.

Chennai suburban rain Weather report

விடிய விடிய கொட்டிய மழை

குறிப்பாக, தமிழகத்தில் 23 மாவட்டங்களில் நேற்று நள்ளிரவு 1 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி மதுரை, திண்டுக்கல், சேலம், கள்ளக்குறிச்சி, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை நாமக்கல், பெரம்பூர், ஈரோடு, திருச்சி, தேனி, விருதுநகர், சென்னை, செங்கல்பட்டடு, திருவண்ணாமலை, விழுப்புரம், நீலகிரி, கோவை, திருப்பூர், தென்காசி, தூத்துக்குடி மற்றும் நெல்லை ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவித்திருந்தது.

அதன்படியே ஈரோடு பகுதிகளில் சுமார் 1 மணிநேரத்திற்கும் மேலாக கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் மாவட்டம் முழுவதும் மழையால் குளிர்ச்சியான சூழல் நிலவியது.

சென்னையில் கொட்டித்தீர்த்த மழை

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை கொட்டி தீர்த்தது.. சென்னையில் இன்று அதிகாலையில் இடி, மின்னலுடன் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால், நுங்கம்பாக்கம், துரைசாமி சுரங்கப் பாதைகளில் தண்ணீர் தேங்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சென்னையில் நேற்று காலையிலிருந்து கடுமையான வெயில் வாட்டி வதைத்த நிலையில் இன்று மழை பெய்து வருகிறது.. எழும்பூர், நுங்கம்பாக்கம், தியாகராய நகர், வளசரவாக்கம், ஆழ்வார்பேட்டை, மயிலாப்பூர், போரூர் உள்ளிட்ட இடங்களில் பலத்த காற்று, இடி மின்னலுடன் கனமழை வெளுத்து வாங்கியது. வேளச்சேரி, தரமணி உள்ளிட்ட இடங்களிலும் இடியுடன் மழை பெய்தது.

சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் அதிகாலை முதல் இடி மின்னலுடன் கனமழை கொட்டித் தீர்த்ததால், நுங்கம்பாக்கம், ராயப்பேட்டை, பட்டினப்பாக்கம் தி.நகர், சைதாப்பேட்டை, குரோம்பேட்டை, பல்லாவரம், தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்தது.. இதில், நுங்கம்பாக்கம் சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சென்னை புறநகர் பகுதிகளில் மழை

சென்னை துரைப்பாக்கத்தில் அதிகபட்சமாக 10 செ.மீ , மற்றும் அடையாறில் 7 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது.. சென்னை தியாகராயநகர் துரைசாமி சுரங்கப்பாதையில் மழை நீர் புகுந்துள்ளது.. இதனால் பாதுகாப்பு கருதி, வாகன ஓட்டிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.. ஊழியர்கள் சுரங்கப்பாதையில் தேங்கியிருக்கும் மழை நீரை வெளியேற்றும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

அதேபோல, சென்னை புறநகர் பகுதியான ஆலந்தூர், பல்லாவரம், குரோம்பேட்டை, தாம்பரம், சேலையூர், வண்டலூர், முடிச்சூர், பகுதிகளிலும் காலையிலிருந்து நல்ல மழை பெய்து வருகிறது.

10 மணிக்குள் 29 மாவட்டங்களில் மழை

இந்நிலையில், இன்று காலை 10 மணிக்கு 29 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக மீண்டும் ஒரு அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, நீலகிரி, திருப்பூர், தேனி, திண்டுக்கல், வேலூர், திருச்சி, பெரும்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, கரூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, சேலம், நாமக்கல், ஈரோடு, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

2 நாட்களுக்கு மழை உண்டு

இதனிடையே, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட 30 மாவட்டங்களில் இன்று மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது

அந்த அறிவிப்பில், "மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஒரு சில இடங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இன்றும், நாளையும் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. வரும் 27 வரை மிதமான மழை தொடரலாம்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டமாக காணப்படும்; ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யும்,.. சென்னையில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

மீனவர்களுக்கு அறிவிப்பு

அதிகபட்ச வெப்பநிலை 35° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

மத்தியமேற்கு, அதனை ஒட்டிய தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகள், குமரிக்கடல் பகுதிகள் மற்றும் வடக்கு வங்கக்கடலின் சில பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். ஆகையால், மீனவர்கள் இன்று மேற்குறிப்பிட்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்" என்று வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+