புயல் கரையை கடந்தாலும்.. சென்னையில் மழை நிக்கல.. அடுத்த 2 மணி நேரம் உஷார்! வானிலை மையம் அலர்ட்
Subscribe to Oneindia Tamil
சென்னை: வங்கக்கடலில் உருவாகியிருந்த மொந்தா புயல், நேற்றிரவு கரையை கடந்தது. இருப்பினும் ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் மழை பெய்துக்கொண்டே இருக்கிறது. இந்நிலையில் சென்னை உட்பட 14 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்திற்கு மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இது குறித்து விடுக்கப்பட்டிருக்கும் அறிவிப்பில், "சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், கோயம்புத்தூர், கன்னியாகுமரி, தென்காசி, தேனி, திருநெல்வேலி, திருச்சி, திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழை பெய்யும்" என்று தெரிவித்திருக்கிறது.













Click it and Unblock the Notifications