வானத்துக்கும் பூமிக்குமா.. ஆடிய ஆட்டம் இருக்கே.. சென்னைக்கு மேலே.. கொட்டிய 400 மின்னல்.. ஷாக்கிங்
சென்னை: சென்னையில் நேற்று பல இடங்களில் அடுத்தடுத்து மின்னல் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ்நாட்டில் வெயில் வாட்டி வதைத்துக்கொண்டு இருந்த நிலையில், மேற்கு திசை காற்று மற்றும் வெப்ப சலனம் காரணமாக ஒருசில இடங்களில் மழை பெய்து வருகிறது. முக்கியமாக வட தமிழ்நாட்டில் கனமழை பெய்து வருகிறது. முக்கியமாக சென்னையில் நேற்று மழை பெய்தது.

சென்னையில், அரும்பாக்கம், கோயம்பேடு, காசிமேடு , ராயப்பேட்டை, கிண்டி, வடபழனி ,திருவொற்றியூர் , எண்ணூர், தேனாம்பேட்டை, அண்ணா சாலை, மெரினா கடற்கரை, சைதாப்பேட்டை, நுங்கம்பாக்கம், ஆகிய பகுதிகளில் இரவு முழுக்க மழை பெய்தது. அதேபோல் எழும்பூர், ஆவடி, வேளச்சேரி, தி நகர் உள்ளிட்ட பகுதிகளிலும் லேசான மழை பெய்தது.
அதிகாலை 2- 3 மணி நேரம் இங்கு விடாமல் மழை பெய்தது. மேலும் 3- 4 மணி நேரங்களுக்கு சென்னையில் மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து உள்ளது. இன்று மாலை சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, திருவள்ளூர், இராணிப்பேட்டை, காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில் மிக கனமழை முதல் கனமழை வரை பெய்யும்.
மின்னல்: இந்த மழைக்கு இடையே சென்னையில் ஆங்கங்கே மின்னல் தாக்குதல் சம்பவங்களும் நடந்தன. சென்னையில் நேற்று பல இடங்களில் அடுத்தடுத்து மின்னல் தாக்கிய நிலையில் நேற்று மட்டும் 400 மின்னல்கள் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஒரே நாளில் மாலையில் இருந்து இரவு வரை 400 மின்னல் தாக்குதல் சம்பவங்கள் நடந்துள்ளன, சென்னையின் நகர பகுதியில் வானத்தில் லைட் போட்டது போல மின்னல் தாக்குதல்கள் நடந்துள்ளன.
மின்னல் வகை: பொதுவாக மின்னல் என்பது மேகத்திற்கும் - மேகத்திற்கும் இடையில், மேகத்திற்கு உள்ளேயே, மேகத்திற்கும் பூமிக்கும் இடையில், மேகத்திற்கும் காற்றிற்கும் இடையில் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன. ஒரு நேர் மின்னூட்டம் பெற்ற மேகங்கள் வானத்தில் எதிர் மின்னூட்டம் பெற்ற மேகங்கள் அருகே வரும் போது அவை இரண்டிற்கும் இடையில் ஏற்படும் ஈர்ப்பு விசையால் காற்றின் வழியே மின் ஆற்றல் பாய்ந்து சக்தியை வெளிப்படுத்தும்.
இவைதான் மின்னல்கள் ஆகும். இந்த மின்னூட்ட வேறுபாடு பூமிக்கும் மேகத்திற்கும் இடையே ஏற்படும் பட்சத்தில் அவை முகில் - புவி மின்னல் எனப்படும். அதாவது மின்னல் மேகத்தில் இருந்து பூமிக்கு வரும். இது போக முகில் - முகில் மின்னல் இரண்டு மேகங்களுக்கு இடையே ஏற்படும் மின்னல் ஆகும்.
முகில் மின்னல், ஒரே மேகத்திற்கு உள்ளேயே ஏற்படும் மின்னூட்ட வேறுபாட்டால் ஏற்படும் மின்னல் ஆகும். மேற்கட்ட இரண்டும் பூமியை தாக்காது. காற்றுக்கும் - மேகத்திற்கும் இடையே ஏற்படும் மின்னல் முகில் - வளி மின்னல் ஆகும். இதில் சென்னைக்கு அருகே கடல் பகுதியில் புவி - முகில் மின்னல்தான் ஏற்பட்டுள்ளது.
மழை நிலவரம்: இது போக திருவள்ளூர், காஞ்சிபுரம், இராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி மற்றும் சேலம் மாவட்டங்களில் கனமழை பெய்தது. இங்கு இரவில் தொடங்கிய மழை தற்போது வரை விடாமல் பெய்து கொண்டு இருக்கிறது.
அடுத்த 3 நாட்களுக்கு தமிழ்நாட்டில் பல பகுதிகளில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையமும் கூறியுள்ளது.
-
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
குடை எடுங்க.. ஜூன் 4ல் தென்மேற்கு பருவமழை கன்பார்ம்! தமிழகத்தின் 16 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications