எல்லாம் ரெடி.. இத செஞ்சா மட்டும் போதும்! மிக்ஜாம் புயல் குறித்து பொதுமக்களுக்கு முதல்வர் வேண்டுகோள்
சென்னை: மிக்ஜாம் புயல் சென்னையை ஒட்டி, ஆந்திராவில் கரையை கடக்க உள்ள நிலையில், பொதுமக்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.
தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று காலை 05.30 மணி அளவில் 'மிக்ஜாம்' புயலாக வலுப்பெற்றது. இது சென்னைக்கு தென்கிழக்கே சுமார் 230 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது. அங்கிருந்து கொஞ்சம் கொஞ்சமாக வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை தெற்கு ஆந்திரா மற்றும் அதனை ஒட்டிய வடதமிழக கடலோரப்பகுதிகளில் நிலை கொள்ளும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக நாளை(டிச.04) சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும் (ரெட் அலர்ட்), ஓரிரு இடங்களில் அதி கனமழையும், வேலூர், இராணிப்பேட்டை, திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், கள்ளக்குறிச்சி, கடலூர், திருப்பத்தூர் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், நாளை சூறை காற்று வீசும் என்றும் ஆய்வு மையம் கூறியுள்ளது. அதாவது நாளை, திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 60 முதல் 70 கிலோமீட்டர் வேகத்திலும் இடையிடையே 80 கிலோமீட்டர் வேகத்திலும், கடலூர், விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் தரைக்காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோமீட்டர் வேகத்திலும் இடையிடையே 70 கிலோமீட்டர் வேகத்திலும் வீசும் என கூறியுள்ளது.
எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு தீவிரப்படுத்தியுள்ளது. மட்டுமல்லாது மாவட்டவாரியாக அமைச்சர்களை நியமித்திருக்கிறது. அதாவது சென்னையில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் மற்றும் தங்கம் தென்னரசு ஆகியோர் ஆய்வில் ஈடுபடுவார்கள் என்றும், சென்னைக்கு அமைச்சர்கள் சேகர்பாபு, மா.சுப்பிரமணியன், திருவள்ளூர் மாவட்டத்திற்கு அமைச்சர் மூர்த்தி, காஞ்சிபுரத்திற்கு அமைச்சர் தா.மோ.அன்பரசன், செங்கல்பட்டு மாவட்டத்திற்கு அமைச்சர் முத்துசாமி ஆகியோர் அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாக தமிழக கூறியுள்ளது.
இந்நிலையில் இன்று மாலை சென்னை எழிலகத்தில் உள்ள பேரிடர் மேலாண்மைத் துறை கட்டுப்பாட்டு அறையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் 'மிக்ஜாம்' புயல் தொடர்பாக வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல தலைவர் பாலச்சந்திரனுடன் காணொலி வாயிலாக உரையாடினார். இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழக அரசு சார்பில் எடுக்கப்பட்டிருக்கக்கூடிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பட்டியலிட்டார்.
பின்னர் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். அதாவது, "புயல் காரணமாக பலத்த காற்றுடன் அதி கனமழை பெய்யும்போது மின் கம்பங்கள், மின் கம்பிகள் மீது மரங்கள் விழ வாய்ப்புள்ளதால் பொதுமக்கள் தேவையில்லாமல் வெளியே வருவதை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன்" என வலியுறுத்தியுள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications