சூறையாடிய மிக்ஜாம் புயல்.. அனைத்தையும் இழந்து தவிக்கும் மக்கள்.. தமிழக அரசு நிவாரணம் எவ்வளவு?
சென்னை: மிக்ஜாம் புயல் காரணமாக பெய்த பெருமழையால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிகக் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. உடமைகளை இழந்து தவிக்கும் மக்களுக்கு நிவாரண உதவி அளிப்பது குறித்து முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை நடைபெற்றது.
வரலாறு காணாத மழை சென்னை மாநகரத்தையும் புறநகர் பகுதிகளையும் புரட்டிப்போட்டு விட்டது. குடியிருப்புகளை வெள்ளநீர் சூழ்ந்துள்ளதால் மின்சாரம் மொத்தமாக தடைபட்டது. உணவுக்காகவும் குடிநீருக்காகவும் மக்கள் தவித்து போய் விட்டனர். ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்களின் உடமைகள் மொத்தமாக வெள்ளநீரில் போய் விட்டது. அனைவரும் முகாம்களில் தங்கவைக்கப்பட்டனர்.

பெரும்பாக்கம், செம்மஞ்சேரி, வேளச்சேரி, கூடுவாஞ்சேரி உள்ளிட்ட பல பகுதிகளிலும் வெள்ளநீர் இன்னமும் வடியவில்லை. வளசரவாக்கம் குடியிருப்புகள் இன்னமும் வெள்ளநீரில் மிதக்கிறது. வடசென்னையில் பல பகுதிகள் சேரும் சகதியுமாக காட்சி அளிக்கிறது. மயிலாப்பூரில் முறிந்து விழுந்த மரங்கள் அகற்றப்படாமல் காணும் இடமெங்கும் குப்பையாக காட்சி அளிக்கிறது.
புறநகர் பகுதிகளில் திடீரென கழுத்தளவிற்கு வெள்ளம் சூழ்ந்த காரணத்தால் அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்பவர்களின் நிலையோ மிகவும் பரிதாப நிலையாகி விட்டது. பலரது வாகனங்கள் வெள்ளநீரில் அடித்து செல்லப்பட்டு விட்டது. யாருடைய கார் எங்கே போய் முட்டிக்கொண்டு நிற்கிறது என்று கூட பலராலும் கண்டுபிடிக்க முடியாத நிலையில் உள்ளது.
வீடுகளுக்குள் வெள்ளநீர் புகுந்ததில் கட்டில், ப்ரிட்ஜ், டிவி, சோபா போன்றவை சேதமடைந்து விட்டது. பள்ளி செல்லும் மாணவர்களுக்கு நோட்டு, புத்தகங்கள் சேதமாகி விட்டது. பெரும் துயரத்திலும் மன அழுத்தத்திலும் இருக்கின்றனர் மக்கள். வெள்ள பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
வெள்ளநீர் வடியாத பகுதிகள் பல உள்ளது. வெள்ளம் வடிந்தாலும் வீட்டில் பொருட்கள் அனைத்தும் சேதமானதால் செய்வதறியாது திகைத்து வருகின்றனர் மக்கள். இந்த நிலையில் மழையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பணிகள் குறித்து சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் துரை முருகன், கே.என்.நேரு, மா.சுப்ரமணியன், சேகர்பாபு, தங்கம் தென்னரசு மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.
இந்த ஆலோசனை கூட்டத்தில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களில் நிவாரணப் பணிகளை தீவிரப்படுத்துவது மற்றும் 4 மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரேஷன் கார்டுகள் மூலம் நிவாரண நிதி வழங்குவது குறித்தும் ஆலோசனை நடைபெற்றது. ரேசன் அட்டைதாரர்களுக்கு தலா 6000 ரூபாய் நிவாரணம் வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இந்த வெள்ள நிவாரணம் மூலம் 30 லட்சம் ரேசன் அட்டைதாரர்கள் பயனடைவார்கள் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கால்நடைகள் உயிரிழந்தால் ரூ.37,500 நிவாரணம் வழங்கப்படும், ஆடுகள் உயிரிழந்தால் தலா 4 ஆயிரம் வழங்கவும் முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். வெள்ளநீரில் உடைமைகள் மொத்தத்தையும் இழந்து தவிக்கும் பலருக்கும் உயிர் மட்டுமே மிஞ்சியுள்ளது. அடிப்படை வசதிகளை உடனடியாக செய்து தர வேண்டும் என்பதே பாதிக்கப்பட்ட மக்களின் கோரிக்கையாக உள்ளது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications