கிறிஸ்துமஸுக்கு சென்னையில் மழை பெய்யுமா? வெதர்மேன் கொடுத்த முக்கிய அப்டேட்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: டிட்வா புயல் காரணமாக வட தமிழகம் மற்றும் கடலோர மாவட்டங்கள் மழைப்பொழிவை பெற்றிருந்தன. இந்நிலையில் தற்போது டெல்டா மாவட்டங்களில் மழை லேசாக பெய்து வருகிறது. மீண்டும் இன்னொரு ரவுண்டு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், சென்னைக்கு மழை இருக்குமா? என்பது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் விளக்கமளித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது x பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது, "சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் கிறிஸ்துமஸ் வரை வறண்ட வானிலைதான் நிலவும். இதற்கிடையில் டிச.16 மற்றும் 17ம் தேதிகளில் லேசான மழைக்கு மட்டுமே வாய்ப்பு இருக்கிறது. அதிகபட்ச வெப்பநிலை 30-32 டிகிரி செல்சியஸ் வரையிலும், குறைந்தபட்ச வெப்பநிலை 22-24 டிகிரி செல்சியஸ் வரையிலும் இருக்கும். இந்த மாவட்டங்கள் கடலோர பகுதி என்பதால் ஈரப்பதம் மிதமான அளவில் இருக்கும்.

rain Chennai tamil nadu

மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களிலும், ராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களிலும் டிச.16-17ம் தேதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

இதற்கிடையில் சென்னை விமான நிலையம் பகுதியில் டிச.12-15 மற்றும் டிச.19-22 தேதிகளில் குறைந்த வெப்பநிலை பதிவாக வாய்ப்பு இருக்கிறது. அதாவது 20 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் குறைய வாய்ப்பு உள்ளது. அதேபோல வேலூர், கரூர் மற்றும் சேலம் ஆகிய மாவட்டங்களில் வெப்பநிலை 15-16 டிகிரி செல்சியஸ் வரையிலும், திருச்சி மற்றும் மதுரையில் 17 டிகிரி செல்சியஸ் வரையிலும் குளிர் நிலவும்" என எச்சரித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+