பட்டாளத்துக்கு வரப்போகுது விடிவுகாலம்?.. முதல்வரின் அதிரடி உத்தரவு.. சேகர்பாபு சொன்ன குட்நியூஸ்!
சென்னை: சென்னை பட்டாளம் பகுதியில் குடியிருப்பைச் சுற்றி வெள்ளம் சூழ்ந்துள்ள நிலையில் மின் மோட்டார்களைக் கொண்டு மழை நீரை அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், பட்டாளம் பகுதியில் வெள்ளம் தேங்கும் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண முதல்வர் முக ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளதாகவும், அதற்கான நடவடிக்கைகள் குறித்தும் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
சென்னையில் அதி கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. சென்னையில் கடந்த இரு நாட்களாக பெய்த பலத்த மழை நேற்று இரவு முதலே படிப்படியாகக் குறையத் தொடங்கியுள்ளது. நேற்று முன்தினம் இரவு முதல் பலத்த இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்து வந்ததால் பல்வேறு சாலைகளில் மழை நீர் தேங்கியது.

பட்டாளம் சுற்று வட்டாரப் பகுதிகளில் மழை வெள்ளம் சூழ்ந்து கடல்போலக் காட்சியளித்தது. பல பகுதிகளில் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்ததால் பொதுமக்கள் கடும் சிரமத்துக்குள்ளாகினர். அத்தியாவசியப் பொருள்களை வாங்க கூட செல்ல முடியாமல் முடங்கியுள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் மழை மற்றும் புயலின்போது பட்டாளம் பகுதி மிகுந்த பாதிப்புக்குள்ளாகும். இதைத்தொடர்ந்து, முதல்வர் முக ஸ்டாலின் நேற்று வெள்ளம் பாதித்த பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார்.
இந்த நிலையில், பட்டாளம் பகுதியில் மழை நீர் பாதிப்புகளை அமைச்சர் சேகர்பாபு இன்று ஆய்வு செய்தார். தொடர்ந்து, அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், தட்டான்குளம் என்று அழைக்கப்படும் பட்டாளம் பகுதியில் ஆதி ஆந்திரா தெலுங்கு பேசும் மக்களும், மற்ற சமூகத்தினரும் ஒன்றிணைந்து வசித்து வருகின்றனர். இந்தப் பகுதியில் காலம்காலமாக மழை பெய்யும்போது எல்லாம் நீர் தேங்குவது வழக்கம்.
இதனைக் கருத்தில் கொண்டுதான் கடந்த முறை தமிழக முதல்வர் ஆய்வுக்கு வந்தபோது இப்பகுதியில் புதிதாக பம்பிங் ஸ்டேஷனை ஏற்படுத்தி 350 திறன் கொண்ட மோட்டார் நிரந்தரமாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் புரசைவாக்கத்தில் தானா தெருவில் ஆரம்பித்து, விருமாணிக்கம் தெரு, மூக்கு தெரு ஆகிய தெருக்களின் வழியாக வந்து இந்த பம்பிங் ஸ்டேஷன் மூலமாக காந்தி கெனாலுக்கு சென்று, கேப்டன் கார்டன் வழியாக வெளியேற்றப்பட்டு வருகிறது.
இப்பகுதி மிகவும் தாழ்வான பகுதியாக இருப்பதால் மழை நீர் தேங்கி சற்று மெதுவாகத்தான் செல்கிறது. முதல்வர் நேற்று ஆய்வு செய்தபோது இப்பகுதியில் இந்தப் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து, ஐஐடி தொழில் வல்லுநர்களோடு ஆலோசித்து உரிய ஆலோசனைகள் மேற்கொண்டு அடுத்த பருவ மழைக்குள் நடவடிக்கை எடுக்கப்படும். மழை பெய்து நின்றவுடன் இரண்டு, மூன்று மணி நேரங்களில் தண்ணீரை அகற்றும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
உணவு, அத்தியாவசிப் பொருள்களை வாங்குவதற்கு பொதுமக்கள் கடும் சிரமத்துக்குள்ளாகி வரும் நிலையில், பொதுமக்களின் வீட்டிற்கே சென்று உணவு வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திமுக நிர்வாகிகள், சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் ஒருங்கிணைந்து மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
பட்டாளம் பகுதியில் 3 உணவு சமையல் கூடத்தில் இருந்து உணவு விநியோகம் செய்யப்படுகிறது. சென்னையில் தேங்கிய மழை நீர் துரிதமாக அகற்றப்படுகிறது. பால், பிஸ்கட் உள்ளிட்ட உணவுப்பொருட்கள் விநியோகிக்கப்படுகிறது. சென்னையில் கால்வாய்கள் சீராக உள்ளதால் மழை நீர் வேகமாக வெளியேறி வருகிறது. புளியந்தோப்பு நெடுஞ்சாலை, ஓட்டேரி ஸ்ரீவட்சன் சாலை பகுதிகளில் முழுவதுமாக தண்ணீர் வடிந்துள்ளது என்றார்.
-
4 நாளைக்கு மழை தான்.. இன்னைக்கும் 14 மாவட்டங்களில் மழை பிச்சுக்கப் போகுது! ஐஎம்டி கொடுத்த அப்டேட்! -
கத்திரி வெயில் முடிஞ்சுபோச்சு.. சென்னை உட்பட 5 மாவட்டங்களில் இன்று காலையிலேயே மழைக்கு வாய்ப்பு! -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி?












Click it and Unblock the Notifications