இந்த ரணகளத்துலயும்.. ஒரு கிளுகிளுப்பு.. ஈசிஆர் பீச்சில் புயலுக்கு இடையே.. நடந்த சம்பவம்.. ஷாக்கிங்
சென்னை: சென்னையில் கனமழைக்கு இடையே சிலர் ஈசிஆரில் இருக்கும் கடற்கரை பகுதிகளில் வெட்டிங் சூட் நடத்தியது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னைக்கு 90 கிமீ வட கிழக்கிலும், நெல்லூருக்கு 140 கி.மீ. தென் கிழக்கிலும் மிக்ஜாம் புயல் மையம் கொண்டுள்ளது. புயல் படிப்படியாக தீவிரமடைந்து, வடக்கு திசையில் நகர்ந்து, தெற்கு ஆந்திர கடற்கரை அருகே மசுலிப்பட்டினம் இடையே கடக்க வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மிக்ஜாம் புயல் காரணமாக புழல் ஏரி நீர் பிடிப்பு பகுதிகளில் இடைவிடாமல் கொட்டித் தீர்த்து வரும் கனமழையால் ஏரியில் இருந்து 4,000 கன அடி தண்ணீர் உபரி நீராக வெளியேற்றப்பட்டு வருகிறது. புழல் ஏரியில் இருந்து வெளியாகும் உபரி நீர் செங்குன்றம் பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் சூழ்ந்துள்ளதால் பல பகுதிகள் தனித்தீவு போல காட்சியளிக்கிறது.

செங்குன்றம் சுற்றுவட்டார பகுதியில் இடைவிடாமல் பலத்த காற்றுடன் கனமழை கொட்டி தீர்த்து வருவதால் அப்பகுதியில் வசிக்கக்கூடிய மக்கள் வீட்டிலேயே முடங்கி உள்ளதுடன் செய்வதறியாமல் தவித்து வருகின்றனர்.
போக்குவரத்து துண்டிப்பு; நேற்று இரவு முதல் தற்போது வரை விடாத பெய்து வரும் கனமழை காரணமாக சாலையில் பெருக்கெடுத்த மழை நீரால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டு உள்ளது. வரலாறு காணாத மழையால் OMR சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. அதேபோல் ஈசிஆர் சாலையிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
சென்னையில், அரும்பாக்கம், கோயம்பேடு, காசிமேடு , ராயப்பேட்டை, கிண்டி, வடபழனி ,திருவொற்றியூர் , எண்ணூர், தேனாம்பேட்டை, அண்ணா சாலை, மெரினா கடற்கரை, சைதாப்பேட்டை, நுங்கம்பாக்கம், ஆகிய பகுதிகளில் இரவு முழுக்க மழை பெய்தது. அதிகாலை முதல் விடாமல் 10 மணி நேரம் இங்கு விடாமல் மழை பெய்தது.
( மிக்ஜாம் புயலின் கண் கடந்தும்.. சென்னையில் இன்னும் மழை விடாதது ஏன்? அதென்ன )
கூடுதல் மழைப்பொழிவு: சென்னையில் இன்று வரை இயல்பை விட கூடுதலாக 29% மழைப்பொழிவு ஏற்பட்டு உள்ளது. மேலும் மழை இப்போது நிற்காது என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் கனமழை நீடிக்கும்.
ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, கள்ளக்குறிச்சி ஆகிய 8 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள ஏரிகள் 98% நிரம்பியதால் மாநில அவசர கால செயல்பாட்டு துறை ஆய்வு பணிகளை செய்து வருகிறது. சாலைகளில் போலீசார் களமிறக்கப்பட்டு பாதுகாப்பு பணிகளை செய்து வருகின்றனர்.

முடங்கிய சென்னை; இப்படி சென்னையே புயல் காரணமாக முடங்கி உள்ளது. சென்னையில் கனமழைக்கு இடையே சிலர் ஈசிஆரில் இருக்கும் கடற்கரை பகுதிகளில் வெட்டிங் சூட் நடத்தியது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதன்படி கடும் காற்று, மழைக்கு இடையே ஈசிஆரில் இருக்கும் அக்கறை பீச், ஈசிஆர் பீச் தொடங்கி பல கடற்கரைகளில் தொடர்ந்து இவர்கள் போஸ்ட் வெட்டிங் , ப்ரீ வெட்டிங் போட்டோக்களை எடுத்துள்ளனர்.,
அங்கே போலீஸ் சோதனைகள் குறைவாக இருந்த காரணத்தால் உள்ளே சென்று புகைப்படங்களை எடுத்துள்ளனர். தண்ணீரை தடுக்க போடப்பட்டு உள்ள கற்கள் மீது நின்று இவர்கள் புகைப்படம் எடுத்தது விமர்சனங்களை சந்தித்துள்ளது. நெட்டிசன்கள் பலரும் இதை பகிர்ந்து விமர்சனங்களை வைத்து வருகின்றனர்.
-
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம்












Click it and Unblock the Notifications