மிக்ஜாம் புயலின் கண் கடந்தும்.. சென்னையில் இன்னும் மழை விடாதது ஏன்? அதென்ன "ரீ சைக்கிள் எபெக்ட்"?
சென்னை; சென்னைக்கு அருகே மிக்ஜாம் புயல் வந்துவிட்டு கடந்து சென்ற பின்பும் கூட இன்னும் மழை நிற்கவில்லை. இப்படி மழை நிற்காமல் போனதற்கு காரணங்கள் சொல்லப்படுகின்றன.
வங்கக்கடலில் நிலை கொண்டு இருக்கும் மிக்ஜாம் புயல் மிக மெதுவாக நகர்ந்து வருகிறது. மணிக்கு 10 கிமீ வேகத்தில் நகர்ந்து வருகிறது. இது மிக வேகமாக வலிமை அடைந்து வருகிறது. தற்போது தீவிர புயலாக இது உள்ளது.
இன்று பிற்பகல் இது அதி தீவிர புயலாக உருவெடுக்கும். அதி தீவிரமாக வலிமை அடைந்து மேலும் தீவிரம் அடையும். கடந்த 6 மணி நேரத்தில் சென்னைக்கு கிழக்கு திசையில் நகர்ந்து வந்தது. இது தொடர்ந்து வடக்கு வடமேற்கு திசையில் புயல் நகர்ந்து செல்லும் .

சென்னை மற்றும் வட மாவட்டங்களில் இரவு வரை மழை பெய்யும். சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில்தான் அதிக கனமழை காற்றோடு பெய்யும். மக்கள் வெளியே செல்ல கூடாது. மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
கண் அருகே வந்தது; மிக்ஜாங் புயல் தொடக்கத்தில் இருந்தே கணிக்க முடியாமல் உள்ளது. இந்த புயல் சென்னைக்கு அருகே 50 கிமீ தூரம் வரை வந்தது.
( இனிதான் ஆட்டமே.. நைட்டு வரை.. வானிலை மைய இயக்குனர் பாலசந்திரன் இப்படி சொல்றாரே! ரொம்ப கவனம் )
தற்போது அந்த புயல் லேசாக ரூட்டை மாற்றி உள்ளது. நேற்று இரவு அந்த புயல் வட வடமேற்கு திசையில் சென்றது. அதாவது தொடக்கத்தில் சரியாக கணிக்கப்பட்ட பாதையில் சென்றது. நெல்லூருக்கும் மசூலிபட்டினத்திற்கும் இடையே செல்லும் வகையில் நகர்ந்தது.ஆனால் இப்போது வடமேற்கு திசையில் செல்ல தொடங்கி உள்ளது. அதாவது கொஞ்சம் சென்னைக்கு அருகே நகர தொடங்கி உள்ளது.
ஆனால் புயலின் கண் ஏற்கனவே சென்னைக்கு அருகே வந்துவிட்டு சென்றுவிட்டது. சென்னைக்கு அருகே மிக்ஜாம் புயல் வந்துவிட்டு கடந்து சென்ற பின்பும் கூட இன்னும் மழை நிற்கவில்லை. இப்படி மழை நிற்காமல் போனதற்கு காரணங்கள் சொல்லப்படுகின்றன.
ரீ சைக்கிள் எபெக்ட்: இதற்கு காரணம்.. ரீ சைக்கிள் எபெக்ட் என்று கூறப்படுகிறது. அதாவது புயலின் முன் பக்கம், நடுபக்கம் .. அதாவது கண் கடந்துவிட்டாலும் கூட.. புயலின் பின் பகுதி இன்னமும் சென்னைக்கு 110 கிலோ மீட்டர் தூரத்தில்தான் உள்ளது.

அதோடு இல்லாமல் புயலின் பின் பக்கம் இழுத்து வரும் மழை மேகங்கள் சென்னைக்கு மேலே வந்து கொண்டு இருக்கின்றன. அதாவது புயலுக்கு பின்னால் இருக்கும் மழை மேகங்கள் இப்போதுதான் சென்னையை நோக்கி வருகின்றன. இந்த மேகங்கள் இன்று மாலை வரை சென்னைக்கு வரும்.அதனால் மாலை அல்லது இரவு வரை சென்னையில் கண்டிப்பாக கனமழை பெய்யும்.
இதுதான் மழைக்கு காரணம்: நேற்று இரவு 10 மணிக்கு சென்னையில் தொடங்கிய மழை மற்றும் புயல் காற்று இன்னும் நிற்கவில்லை. மழையோடு சேர்த்து 50- 80 கிமீ வேகம் வரை காற்று வீசி வருவதால் மக்கள் வீடுகளுக்குள் முடங்கி உள்ளனர்.
புயலுக்கு முன் ஒரு கட்டமாக தீவிர மழை மேகங்கள் சென்னைக்கு வந்தன. அதன்பின் புயல் சென்னைக்கு அருகே வந்த போது இரண்டாம் கட்டமாக இன்னும் தீவிர மழை மேகங்கள் சென்னைக்கு அருகே வந்தன. மூன்றாம் கட்டமாக புயல் நகர நகர கூடுதல் மழை மேகங்கள் சென்னைக்கு அருகே வரும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளன. இதுதான் தற்போது மழைக்கும் காரணம் ஆகி உள்ளது.
-
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம்












Click it and Unblock the Notifications