பட்டையை கிளப்பிய மழை.. கடலூர், புதுச்சேரியில் வெளுத்து வாங்கிருச்சே! இன்றும் சம்பவம் இருக்காம்
கடலூர்: தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டத்திலும் புதுச்சேரியிலும் நேற்று தொடங்கிய மழை விடிய விடிய வெளுத்து வாங்கி இருக்கிறது.
லட்சத் தீவு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சியாலும், தென் மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் உள்ள வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாகவும், நேற்று தென் தமிழ்நாட்டின் மாவட்டங்கள் மற்றும் வட தமிழக கடலோர மாவட்டங்களில் அநேக இடங்களிலும், வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்து இருந்தது.

இந்த நிலையில் நேற்று கடலூர் மற்றும் புதுச்சேரியில் கனமழை கொட்டத்திர்த்தது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டு இருக்கும் தகவலில், “கண்காணிப்பகங்கள்: புதுச்சேரி - 14.0, கடலூர் - 7.0, நாகப்பட்டினம் - 4.0, பரங்கிப்பேட்டை (கடலூர்) 3.0, காரைக்கால் - 3.0, கூனூர் (நீலகிரி) - 2.0, மதுரை - 2.0, பாம்பன் (ராமநாதபுரம்) - 0.9, வால்பாறை (கோயம்புத்தூர்) - 0.8, அதிராம்பட்டினம் (தஞ்சாவூர்) - 0.6,
தானியங்கி வானிலை மையங்கள்: விருதுநகர் - 4.0, விஐடி சென்னை (செங்கல்பட்டு) - 2.5, கோவில்பட்டி (தூத்துக்குடி) - 1.5, எண்ணூர் துறைமுகம் (சென்னை) - 0.5, பெரியகுளம் (தேனி) 0.5. வேளாண் வானிலை மையங்கள்: புதுச்சேரி - 12.0, அருப்புக்கோட்டை (விருதுநகர்) - 7.5, பாப்பாரப்பட்டி (தர்மபுரி) - 1.0.” என்று குறிப்பிட்டு உள்ளது.
தானியங்கி மழை அளவீடு நிலையங்கள்: சத்யபாமா_பல்கலைக்கழகம் (காஞ்சிபுரம்) - 7.0, தரமணி_ (சென்னை) 2.0, அண்ணா பல்கலைக்கழகம் (சென்னை) 1.0, நியாட் பள்ளிக்கரணை (சென்னை) 2.1, ஒய்எம்சிஏ நந்தனம் (சென்னை) 0.5” என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.
இன்று, திருவள்ளூர், சென்னை, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, அரியலூர், மயிலாடுதுறை, தேனி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்கள் மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தின் மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.












Click it and Unblock the Notifications