வங்கக்கடலில் உருவானது டானா புயல்.. ஒடிசா, மேற்கு வங்கத்திற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை!
சென்னை: வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது புயலாக வலு பெற்றிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்திருக்கிறது. இது நாளை தீவிர புயலாக வலுப்பெற கூடும் என்றும் வானிலை மையம் எச்சரித்துள்ளது. எனவே ஒடிசா மற்றும் மேற்குவங்க மாநிலங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டிருக்கிறது.
மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலமானது வலுப்பெற்று தற்போது வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து வருகிறது. இது மேலும் வலுவடைந்து நாளை தீவிர புயலாக உருமாறும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இது நடப்பு ஆண்டின் 3வது புயல் என்றும், இதற்கு கத்தார் நாட்டின் பரிந்துரைப்படி டானா என பெயரிடப்பட்டுள்ளதாகவும் வானிலை மையம் கூறியுள்ளது.

தீவிர புயலாக வலுப்பெறும் டானா, 25ம் தேதி அதிகாலை ஒடிசாவின் பூரிக்கும், சாகர் தீவுகளுக்கு இடையே கரையை கடக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இது கரையை கடக்கும்போது மணிக்கு 100 முதல் 120 கி.மீ வேகம் வரை பலத்த காற்று வீசும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. புயல் காரணமாக ஒடிசா மற்றும் மேற்கு வங்கம் என இரண்டு மாநிலங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டிருக்கிறது.
அதேபோல கொல்கத்தா, தெற்கு 24 பர்கானாஸ், வடக்கு 24 பர்கானாஸ், கிழக்கு மேதினிபூர், மேற்கு மேதினிபூர், ஜார்கிராம், பாங்குரா, ஹூக்ளி, ஹெளரா ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு நாளை முதல் 26ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டை பொறுத்தவரை இந்த புயலால் பாதிப்பு ஏதும் இல்லை.
இது குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள அறிக்கையில், "நேற்று கிழக்கு-மத்திய வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை, கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 18 கிமீ வேகத்தில் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து 'டானா' புயலாக வலுப்பெற்றுள்ளது. காலை 5:30 மணி நிலவரப்படி, இந்த புயல் பாரதீப்பில் (ஒடிசா) தென்கிழக்கே சுமார் 560 கிமீ தொலைவிலும், சாகர் தீவின் (மேற்கு வங்கம்) தெற்கு-தென்கிழக்கே 630 கிமீ தொலைவிலும் நிலை கொண்டிருக்கிறது.
இது நாளை அதிகாலை வடமேற்கு வங்கக் கடலில், வடமேற்கு நோக்கி நகர்ந்து கடுமையான சூறாவளி புயலாக தீவிரமடையும். பின்னர் வடக்கு ஒடிசா மற்றும் மேற்கு வங்கக் கடற்கரையை பூரி மற்றும் சாகர் தீவுகளுக்கு இடையே கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாளை இரவு தொடங்கி, அடுத்த நாள் காலை வரை, மணிக்கு 120 கிமீ வேகத்தில் காற்று வீசும்" என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
புயல் காரணமாக, ரயில்வே துறை அதிகாரிகள் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். அதன்படி, புயல் கரையை கடக்கும் பாதையில் உள்ள ரயில் தண்டவாளங்கள் ஏதேனும் பழுதடைந்தால் உடனடியாக அதை மாற்றவும், பழுதை நீக்கி ரயில் இயக்கத்தை சீர் படுத்தவும் குழுக்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன.
புயல் நேரத்தில் ரயில்கள் ரத்து செய்யப்படும். புயல் கரையை கடந்த பின்னர், வழித்தடங்களில் ஏற்பட்டுள்ள பாதிப்பை கண்டறிந்து அது உடனடியாக சரி செய்யப்படும் என ரயில்வே கோட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஒடிசாவில் புயலால் 10 லட்சம் மக்கள் பாதிக்கப்பட இருப்பதாகவும், அவர்களை பாதுகாப்பாக தங்க வைக்க 5000 க்கும் மேற்பட்ட நிவாரண மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், ஒடிசா வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை அமைச்சர் சுரேஷ் பூஜாரி தெரிவித்திருக்கிறார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications