செம்பரம்பாக்கம், புழல், பூண்டி ஏரிகளில் நீர் திறப்பு.. கரையோர பகுதிகளுக்கு.. வெள்ள அபாய எச்சரிக்கை
சென்னை: செம்பரம்பாக்கம், புழல், பூண்டி ஏரிகளில் நீர் திறக்கப்பட்டு உள்ளது. உபரிநீர் கால்வாய் அருகே வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
ஆனால் படிப்படியாக, பாதுகாப்பாக தண்ணீர் திறக்கப்படுகிறது. இதனால் ஊருக்குள் வெள்ளம் ஏற்படும் வாய்ப்புகள் இல்லை. உபரிநீர் கால்வாய் அருகே வசிக்கும் பகுதிகளில் உள்ளவர்கள் மட்டும் பாதுகாப்பாக இருக்க எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
22 அடியை நெருங்கிய செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம், புழல் ஏரியில் நீர் திறப்பு 500 கனஅடியாக அதிகரித்து உள்ளது. பூண்டி ஏரியில் 200 கனஅடி உபரி நீர் திறக்கப்பட்டு உள்ளது. தொடர் கனமழை காரணமாக ஏரிகளில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டு உள்ளது.

செம்பரம்பாக்கம்
தொடர் மழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் மட்டம் 22 அடியை எட்டியதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று காலை 8 மணி முதல் வினாடிக்கு 200 கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. செம்பரம்பாக்கம் ஏரிக்கு வினாடிக்கு 1,330 கன அடியாக நீர்வரத்து உள்ளது. மொத்த கொள்ளளவான 3645 மில்லியன் கன அடியில் 3110 மில்லியன் கன அடியாக நீர் இருப்பு உள்ளது.
சென்னை கனமழை
இதனால் இன்று சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கனமழை பெய்யும். டிட்வா புயல் ஏற்கனவே காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுவிழந்த நிலையில் இன்று இரவு நெல்லூர் அருகே நிலப்பகுதியைக் கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கூறுகிறது.
நேற்று இரவு சென்னையில், அரும்பாக்கம், கோயம்பேடு, காசிமேடு , ராயப்பேட்டை, கிண்டி, வடபழனி, திருவொற்றியூர் , எண்ணூர், தேனாம்பேட்டை, அண்ணா சாலை, மெரினா கடற்கரை, சைதாப்பேட்டை, நுங்கம்பாக்கம், ஆகிய பகுதிகளில் இரவு மழை பெய்தது. அதிகாலையில் 1-2 மணி நேரம் விடாமல் மழை பெய்தது. ஆனாலும் அங்கு தண்ணீர் வேகமாக வடிந்துள்ளது.
இப்போது காலை 9 மணியில் இருந்து மீண்டும் விடாமல் மழை பெய்து வருகிறது. இன்று தமிழகத்தின் பெரும்பாலான இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது. இராமநாதபுரம், புதுக்கோட்டை, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், கடலூர் மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் கனமழையும், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, விழுப்புரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், அரியலூர், பெரம்பலூர், சிவகங்கை மாவட்டங்களில் சில இடங்களிலும் கனமழை பெய்து வருகிறது.
டிட்வா புயல்
கரையை கடந்து வருகிறது காற்றழுத்த தாழ்வு மண்டலம் என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்து உள்ளார். சில மணிநேரங்களில் முற்றிலுமாக கரையைக் கடந்துவிடும் என்று தமிழ்நாடு வெதர்மேன் கூறி உள்ளார்.
சென்னையைச் சுற்றியுள்ள மாவட்டங்களைக் கடந்து செல்கிறது, ஒட்டுமொத்த தமிழ்நாட்டிலும் இன்று மழை பெய்ய வாய்ப்பு என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் தெரிவித்துள்ளார்.
சென்னைக்கு 100 கி.மீ தூரத்தில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம். மணிக்கு 3 கி.மீ வேகத்தில் தெற்கு தென்மேற்கு திசையில் மெதுவாக நகர்கிறது. அடுத்த 6 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுக்குறையக்கூடும் என்று இன்னொரு பக்கம் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
முன்னர் டிட்வா புயல், காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுவிழந்து, தற்போது பகுதி அளவில் நிலப்பகுதிக்குள் நகர்ந்துள்ளது. இதன் விளைவாக, சென்னை, குறிப்பாக காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு பகுதியில் இடியுடன் கூடிய கனமழை கொட்டித் தீர்க்கிறது. அதிகாலை 2.30 மணி வரை காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு பகுதியில் சிறப்பான மழை பதிவானது. நீண்ட நாட்களாக மழையை எதிர்பார்த்த தென் சென்னைக்கும் தற்போது மழை கிடைக்கிறது., என்று தமிழ்நாடு வெதர்மேன் கூறி உள்ளார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications