இன்று இரவு நடக்கும் சம்பவம்.. டிட்வா புயலின் மிச்சம்.. எங்கே கடக்கும் தெரியுமா? வெதர்மேன் வார்னிங்

Subscribe to Oneindia Tamil

சென்னை: டிட்வா புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலிமை இழந்து தொடர்ந்து சென்னைக்கு அருகே நிலவி வரும் நிலையில், இன்று இரவு கரையை கடக்கும் என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் செய்துள்ள போஸ்டில், இன்று நல்ல மழை பெய்யும் வாய்ப்புகள் உள்ளன. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய பகுதிகளில் கனமழை பெய்யும்.

இந்த தாழ்வு மண்டலம் அருகே வர வர மழை பெய்யும். இந்த தாழ்வு மையம் இன்று இரவு புதுச்சேரி, சென்னை இடையே ஈசிஆர் பகுதியில் வலிமை இழந்து கரையை கடக்கும் என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

டிட்வா புயல்

வங்கக் கடலில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாகப் பலவீனமடைந்த டிட்வா புயல், திங்கள்கிழமை சென்னையை கனமழையால் புரட்டி எடுத்தது.

Cyclone Ditva will be weakened more today and may cross near ECR says Tamil Nadu Weatherman

ஞாயிறன்று மிக அதிக அளவில் மேக மூட்டத்தை இழந்த புயல், ஒரே இரவில் வலுப்பெற்று ஈரப்பதத்தைச் சேகரித்தது. மணிக்கு 5 கி.மீ வேகத்தில் வடக்கு நோக்கி நகர்ந்து, கடற்கரையை நெருங்கியதால், திங்கள் அதிகாலை 5 மணி முதல் சென்னை மற்றும் சுற்றுவட்டாரங்களில் தொடர்ச்சியான கனமழை பெய்தது. அதன்பின் சென்னையில் மழை தீவிரம் அடைந்தது.

முக்கியமாக வட சென்னையில் பெருமழை பொழிந்தது. இதனால் தாழ்வான சில பகுதிகள் வெள்ளத்தில் நகரின் பெரும்பாலான பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. காலை 10 மணியளவில், இந்திய வானிலை ஆய்வு மையம் (ஐ.எம்.டி) சென்னைக்கு ஆரஞ்சு (மிகக் கனமழை) எச்சரிக்கையையும், திருவள்ளூருக்கு சிவப்பு (அதி கனமழை) எச்சரிக்கையையும் மீண்டும் வெளியிட்டது.

சென்னையில் நுங்கம்பாக்கம் 9.45 செ.மீ, மீனம்பாக்கம் 6.2 செ.மீ மழையைப் பதிவு செய்தன. எண்ணூர் மட்டும் காலை 8:30 முதல் மதியம் 2 மணிக்குள் 13 செ.மீ பதிவிட்டு, சென்னை மாநகராட்சிப் பதிவுகளில் முதலிடம் பிடித்தது. பாரிஸ் கார்னர், ஐஸ் ஹவுஸ், மாதவரம், சாலிகிராமம், வடபழனி ஆகியவற்றிலும் 10 செ.மீட்டருக்கும் அதிகமான மழை பதிவானது.

சென்னை கனமழை

டிட்வா புயல் வலிமை இழந்தாலும் சென்னையில் இருந்து 30-40 கி.மீ தொலைவில் கடலில் நீடிக்கும் வானிலை மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் இன்று சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கனமழை பெய்யும். டிட்வா புயல் ஏற்கனவே காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுவிழந்த நிலையில் இன்று இரவு நெல்லூர் அருகே நிலப்பகுதியைக் கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கூறுகிறது.

நேற்று இரவு சென்னையில், அரும்பாக்கம், கோயம்பேடு, காசிமேடு , ராயப்பேட்டை, கிண்டி, வடபழனி ,திருவொற்றியூர் , எண்ணூர், தேனாம்பேட்டை, அண்ணா சாலை, மெரினா கடற்கரை, சைதாப்பேட்டை, நுங்கம்பாக்கம், ஆகிய பகுதிகளில் இரவு மழை பெய்தது. அதிகாலையில் 1-2 மணி நேரம் விடாமல் மழை பெய்தது. ஆனாலும் அங்கு தண்ணீர் வேகமாக வடிந்துள்ளது.

இப்போது காலை 9 மணியில் இருந்து மீண்டும் விடாமல் மழை பெய்து வருகிறது. இன்று தமிழகத்தின் பெரும்பாலான இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது. இராமநாதபுரம், புதுக்கோட்டை, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், கடலூர் மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் கனமழையும், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, விழுப்புரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், அரியலூர், பெரம்பலூர், சிவகங்கை மாவட்டங்களில் சில இடங்களிலும் கனமழை பெய்து வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+