இலங்கையை புரட்டிப்போட்ட திட்வா புயல்.. மின்சாரம், போக்குவரத்து சேவைகள் துண்டிப்பு.. 90 பேர் பலி!
கொழும்பு: இலங்கையில் திட்வா புயல் தாக்கத்தினால் 90 பேர் உயிரிழந்திருப்பதாகவும், 100க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் மின்சாரம் மற்றும் செல்ஃபோன் சேவை துண்டிக்கப்பட்டுள்ள நிலையில், பாதுகாப்பு நடவடிக்கைகளை அந்நாட்டு அரசு துரிதப்படுத்தி இருக்கிறது.
இலங்கையை ஒட்டிய கடல் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நவம்பர் 27ஆம் தேதி புயலாக மாறியது. திட்வா என்று பெயரிடப்பட்டுள்ள இந்த புயல் காரணமாக, இலங்கையின் பல்வேறு பகுதிகளிலும் தொடர்ந்து மழை பெய்து மிகப்பெரிய சேதம் ஏற்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 300 மிமீ மழை பெய்து பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

அதேபோல் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் ஆறுகள் உள்ளிட்ட நீர்நிலைகளின் நீட்மட்டம் எதிர்பாராத அளவிற்கு உயர்ந்துள்ளது. இதனால் அப்பகுதிகளை ஒட்டி வாழும் மக்கள் உடனடியாக பாதிகாப்பான இடத்திற்கு நகருமாறு அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர். அதேபோல் மலையகத்தின் எந்தவொரு பகுதியிலும் மண்சரிவு ஏற்படலாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி சிலர் உயிரிழந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. அதேபோல் மண்சரிவு காரணமாக ஏராளமான சாலைகளும் மூடப்பட்டுள்ளன. அதேபோல் கனமழை காரணமாக இலங்கை சுமார் 20 சதவிகித மக்கள் வசிக்கும் இடங்களில் மின்சாரம் தடை செய்யப்பட்டுள்ளது. அதேபோல் செல்ஃபோன் சேவைகளும் துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் ரயில், போக்குவரத்து மற்றும் விமான சேவைகளும் பல்வேறு பகுதிகளில் தடைப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் கண்டி மாவட்டத்தில் மட்டும் 50 பேர் உயிரிழந்ததாகவும், 67 பேர் காணாமல் போயுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. மொத்தமாக கண்டி, பதுளை, அம்பாறை உள்ளிட்ட பகுதிகளில் 90 பேர் உயிரிழந்திருப்பதாக இலங்கை அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இந்த திட்வா புயலால் 2.19 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இலங்கையின் பல்வேறு பகுதிகளில் மழைநீர் சூழ்ந்து வெள்ளக்காடாக காட்சியளிக்கும் சூழலில், வீடுகளில் மேற்கூரை வரை தண்ணீர் சூழ்ந்திருப்பது தெரிகிற்து. இதனால் அவர்களை மீட்பதற்கான பணிகளும் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்காக ராணுவமும் களமிறக்கப்பட்டுள்ளது.
-
Low Pressure: காற்றழுத்த தாழ்வு பாதையால் நடக்கும் மேஜிக்! தென் கடலோர மாவட்டங்களில் பிச்சு உதறப் போகுது மழை! -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சொதப்பிட்டீங்களே.. இப்போ பாருங்க போக முடியல.. கடுப்பான விஜய்.. காரணம் புஸ்ஸி, ஆதவ்? என்னாச்சு? -
திடீரென வீடியோ வெளியிட்டு மதுரை மத்திய தொகுதி வேட்பாளர் சுந்தர் சி உருக்கம்! பிடிஆர் இருக்காரே! -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல்












Click it and Unblock the Notifications