சென்னை உட்பட 4 மாவட்டங்கள்.. அடுத்த 24 மணி நேரம் வெளுக்கப் போகும் கனமழை.. வானிலை ஆய்வு மையம் அப்டேட்
சென்னை: சென்னையில் இருந்து 40 கிமீ தூரத்தில் ஒரே இடத்தில் பல மணி நேரமாக நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று இரவு காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இன்று நள்ளிரவு எண்ணூர் - மாமல்லபுரம் இடையே சென்னைக்கு தெற்கு கரையை கடக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
வடதமிழகத்தை அச்சுறுத்தி வந்த டிட்வா புயல் வலுவிழந்து, சென்னை அருகே ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மையம் கொண்டுள்ளது. கடந்த 18 மணி நேரமாக சென்னைக்கு அருகில் கிழக்கே 40 கிமீ தொலைவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக ஒரே இடத்தில் மையம் கொண்டிருக்கிறது. இதனால் தொடர்ந்து சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

இந்த ஆழ்ந்த காற்றழுத்த மண்டலம், இன்று நள்ளிரவு எண்ணூர் - மாமல்லபுரம் இடையே சென்னைக்கு தெற்கே கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தரப்பில் கணிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் சில இடங்கள் மற்றும் புதுச்சேரியில் இன்று இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை தொடரும் என்றும், சென்னை, திருவள்ளூரில் ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் குமரிக்கடல், மன்னார் வளைகுடா, தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் இன்று சூறாவளிக் காற்று வீசக்கூடும்.
இதனால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல் மதுரை, விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை மற்றும் டெல்டா மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும், காற்றழுத்த தாழ்வு பகுதி கரையை கடந்த பின் ராணிப்பேட்டை மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் பொதுமக்கள் இன்றும் தேவையின்றி வெளியில் வருவதை குறைத்துக் கொள்ளலாம். ஏற்கனவே பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால், பெற்றோர் கூடுதல் கவனமாக இருப்பது அவசியம். ஏற்கனவே சென்னையில் ஆங்காங்கே மழைநீர் தேங்கியுள்ள சூழலில், அதனை அகற்றும் பணிகளும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
-
கத்திரி வெயில் முடிஞ்சுபோச்சு.. சென்னை உட்பட 5 மாவட்டங்களில் இன்று காலையிலேயே மழைக்கு வாய்ப்பு! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 19 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications