இன்று இரவு இருக்கு கச்சேரி.. பெஞ்சல் புயல்.. சென்னையை சுற்றி வளைத்த மேகங்கள்.. வெதர்மேன் அப்டேட்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: இன்று இரவு முதல் அதிகாலை வரை ஃபெஞ்சல் புயல் கரையைக் கடக்கும் என்றும், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் அதிக மழை பெய்யும் என்றும் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கணித்துள்ளார். அடுத்த 12 மணி நேரத்துக்கு அதிக மழை இருக்கும் என பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

வங்கக்கடலில் உருவாகி உள்ள ஃபெஞ்சல் (ஃபெங்கல்) புயல் சென்னையில் இருந்து, 140 கி.மீ தொலைவில் உள்ளது. பெஞ்சல் புயல் தற்போது வங்கக்கடலில் சென்னைக்கு தென்கிழக்கே 140 கி.மீ தொலைவிலும், புதுச்சேரிக்கு 180 கி. மீட்டர் தொலைவிலும் மையம் கொண்டுள்ளது. மணிக்கு 7 கிலோமீட்டர் வேகத்தில் கரையை நோக்கி வந்து கொண்டிருந்தது. தற்போது மணிக்கு 12 கி.மீ.வேகத்தில் நகர்கிறது.

cyclone fengal weather chennai

பலத்த காற்றுடன் மழை: பெஞ்சல் புயல் இன்று மாலை புதுச்சேரிக்கு அருகே காரைக்கால் - மாமல்லபுரம் இடையே இன்று கரையை கடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. புயல் கரையை நோக்கி நகர்ந்து வருவதால், சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் தற்போது பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்து வருகிறது.

வெதர்மேன் லேட்டஸ்ட் அப்டேட்: இந்நிலையில் தனியார் வானிலை ஆய்வாளரான தமிழ்நாடு வெதர்மேன் என அழைக்கப்படும் பிரதீப் ஜான், ஃபெஞ்சல் புயல் அப்டேட்டை வெளியிட்டுள்ளார். அதன்படி, இன்று இரவு முதல் அதிகாலை வரை ஃபெஞ்சல் புயல் கரையைக் கடக்கும் என்றும், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் அதிக மழை பெய்யும் என்றும் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

cyclone fengal weather chennai

12 மணி நேரத்துக்கு கனமழை: தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் வெளியிட்டுள்ள பதிவில், “சென்னை மற்றும் அதன் சுற்று வட்டார மாவட்டங்கள் மீது இப்போது அடர்ந்த மேகங்கள் நிலவி வருகின்றன. அடுத்த 12 மணிநேரத்தில் இந்த மேகங்கள், சென்னை மற்றும் அதன் சுற்று வட்டார மாவட்டங்கள் மீது தொடர்ந்து விழும். ஃபெஞ்சல் புயல் மெதுவாக நகர்ந்து வரும் நிலையில், இந்த காலகட்டத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் அதிக மழை பெய்யும்.

நேற்று இரவு முதல் இன்று காலை 8.30 மணி வரை சென்னை மற்றும் அதன் சுற்று வட்டார மாவட்டங்களில் 60 - 120 மி.மீ மழை பெய்துள்ளது. அடுத்த 12 முதல் 18 மணிநேரம் முக்கியமாக கவனிக்க வேண்டிய நேரமாக இருக்கும்.

புயல் கரையை கடக்கும் நேரம் மற்றும் இடம்: சென்னைக்கும் புதுச்சேரிக்கும் இடையே மரக்கண்ணம் முதல் மாமல்லபுரம் வரை எங்காவது புயல் கரையைக் கடக்கும். தெளிவுபடுத்த வேண்டிய விஷயம், புயல் கரையைக் கடக்கும் நேரம். பெரும்பாலும் புயல் கரையைக் கடக்கும் நேரம் இன்று இரவு முதல் நாளை (டிசம்பர் 1) அதிகாலை வரை இருக்கும். எனவே புயல் கரையைக் கடக்கும் வரை மழை பெய்து கொண்டே இருக்கும். புயல் கரையைக் கடப்பது எவ்வளவு தாமதமாகிறதோ, அவ்வளவு அதிகமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் மழை பெய்யும்.

காற்று: கடலோரப் பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 50 முதல் 70 கி.மீ வேகத்தில் இன்று மாலை / இரவு முதல் வீசும். எனவே காற்று தற்போது மிகப்பெரிய அச்சுறுத்தல் அல்ல. அடுத்த 12-18 மணி நேரத்திற்கு தீவிர மழை பெய்யும்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+