பெஞ்சல் புயல் கரையை கடந்த பிறகும் விடாத சூறைக்காற்று.. கடலூரில் விடிய விடிய பெய்த மழை.. ஆறா ஓடுதே!
சென்னை: ஃபெஞ்சல் புயல் கரையைக் கடந்த பிறகும் கனமழை, சூறைக்காற்று தொடர்ந்து வருகிறது. கடலூர் சுற்று வட்டார பகுதிகளில் விடிய விடிய கனமழை பெய்துள்ளது. மரக்காணம் பகுதியில் பலத்த சூறைக்காற்று தொடர்ந்து வீசி வருகிறது.
சென்னை உள்ளிட்ட மாவட்டங்களை மிரட்டிய ஃபெஞ்சல் (ஃபெங்கல் - Fengal) புயல் நேற்று இரவு மாமல்லபுரம் - புதுச்சேரி இடையே கரையைக் கடந்தது. இதனால் மழை படிப்படியாக குறைந்து வருகிறது. ஃபெஞ்சல் புயலின் முனைப்பகுதி நேற்று மாலை கரையைக் கடக்கத் தொடங்கிய நிலையில் இரவு 11.30 மணியளவில் புயல் முழுமையாக கரையைக் கடந்தது. சென்னை, காஞ்சிபுரம், செங்ல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மற்றும் திருவள்ளூர் உள்ளிட்ட 7 வடமாவட்டங்களில் நேற்று கனமழை கொட்டித் தீர்த்தது.

கரையை கடந்ததும் உடனடியாக ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகி, படிப்படியாக வலு குறையும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்தது. ஃபெஞ்சல் புயல், கரையை கடந்தபோது மரக்காணம் பகுதிகளில் சுமார் 90 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசியது. பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன. புதுச்சேரி மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்தது.
இந்நிலையில், புயல் கரையைக் கடந்தபிறகும் பலத்த சூறாவளிக் காற்று தொடர்ந்து வருகிறது. மாமல்லபுரத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் மழை நின்றாலும், தற்போது காற்றின் வேகம் அதிகமாக உள்ளதால் பாதுகாப்பு கருதி மின்சாரம் இன்னும் வழங்கப்படவில்லை. தற்போது வரை மரக்காணத்தில் பலத்த சூறைக்காற்று வீசுகிறது. காற்றின் வேகம் குறையவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
கடலூரில் விடிய விடிய கனமழை பெய்துள்ளது. ஃபெஞ்சல் புயல் நேற்று இரவு கரையைக் கடந்துவிட்ட பிறகும் கூட கடலூர் வட்டாரத்தில் விடிய விடிய மழை கொட்டித் தீர்த்தது. விடாது பெய்த கனமழையால் கடலூர் சாலைகளில் தண்ணீர் ஆறாக ஓடுகிறது. ஃபெஞ்சல் புயல் கரையைக் கடந்தாலும், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து 7 கி.மீ வேகத்தில் நகர்ந்து செல்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் காரணமாகவே இன்னும் மழை, காற்றின் தாக்கம் குறையவில்லை எனத் தெரிகிறது.
தென்மண்டல வானிலை மையத்தின் இயக்குநர் பாலசந்திரன் கூறும்போது, "புயல் கரைக்கு அருகே வரும்போது அதன் நகர்வு வேகம் சற்று குறைய வாய்ப்பு உண்டு. புயலை மிகத் துல்லியமாக சொல்ல முடியாது. திடீரென காற்று வீசும். திடீரென மழை பெய்யும். புயலின் அமைப்பே அப்படித்தான். புயல் கரையை கடக்க சில மணிநேரங்கள் கூட ஆகலாம். முழுமையாக கரையை கடக்க சில பல மணிநேரங்கள் ஆகலாம்.
ஒவ்வொரு புயலுக்கும் ஒரு அமைப்பு உள்ளது. அது கடல் பகுதியில் ஒரு மாதிரியும், தரைப்பகுதியில் ஒரு மாதிரியும் இருக்கும். சில சமயங்களில் வேகமாக கரையை கடக்கும். சில நேரங்களில் மெதுவாக கரையை கடக்கலாம். எனவே, எந்த இடத்தில் புயல் கரையை கடக்கும் என்பதை கூற முடியாது.
ஃபெஞ்சல் புயலைப் பொறுத்தவரை, சில சமயங்களில் 12 கி.மீ, சில சமயங்களில் 7 கி.மீ வேகம், சில சமயங்களில் 13 கி.மீ வேகத்தில் நகர்கிறது. பல்வேறு காரணிகளுடன் தொடர்பிருப்பதால், புயலின் வேகத்தில் மாறுபாடு ஏற்படுகிறது. புயலைச் சுற்றியுள்ள மேககூட்டங்களைப் பொருத்துதான் மழை பொழிவு இருக்கும்.
மேகக் கூட்டங்கள் சூழ்ந்திருந்தால், தொடர்ந்து மழைப்பொழிவும், கொஞ்சம் விலகியிருந்தால் விட்டுவிட்டு மழைப்பொழிவும் இருக்கும். புயல் என்பது ஒரு பரவியிருக்கக்கூடிய அமைப்பு. புயலின் கண்பகுதி கூட ஒரு 10-15 கி.மீ வரை இருக்கும்" என்று தெரிவித்திருந்தார்.
ஃபெஞ்சல் புயல் காரணமாக சென்னையில் அநேக இடங்களில் கன மழை தொடர்ச்சியாக நேற்று முன்தினம் மாலை முதல் தொடங்கிய நிலையில் நேற்று இரவு குறைய தொடங்கியது. சென்னையில் ஒரு சில பகுதிகளில் வெள்ள நீர் தேங்கி இருந்தாலும், பல இடங்களில் உடனடியாக அந்த நீர் வடிந்துள்ளது.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications