மிரட்டும் ஃபெஞ்சல் புயல்.. 55 விமானங்கள் ரத்து! சென்னை ஏர்போர்ட் நாளை அதிகாலை வரை மூடப்படுகிறது
சென்னை: சென்னை விமான நிலையம் நாளை அதிகாலை 4 மணி வரை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பெஞ்சல் புயல், கனமழை காரணமாக சென்னை விமான நிலைய ஓடுபாதையை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் சென்னை விமான நிலையம் மூடப்படுவதாக சென்னை விமான நிலைய நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சென்னையில் நேற்று இரவு முதல் தற்போது வரை மழை பெய்து வருகிறது. இடை இடையே மழை விட்டாலும், தொடர்ந்து கனமழை கொட்டி வருகிறது. ஃபெஞ்சல் புயல் காரணமாக சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்து வருகிறது.

தொடர்ந்து மழை பெய்து வருவதால் சென்னையில் பல்வேறு இடங்களில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. சென்னை விமான நிலையத்திலும் மழைநீர் சூழ்ந்துள்ளது. விமான நிலைய ஓடு பாதையில் மழை வெள்ளம் சூழ்ந்துள்ளதால் விமானங்கள் இயங்க முடியாத சூழல் உள்ளது. இதன் காரணமாக சென்னையில் இன்று 55 விமானங்கள் ரத்து செய்யப்பட்டது.
இந்த நிலையில் நாளை அதிகாலை வரை சென்னை விமான நிலையம் மூடப்படுவதாக விமான நிலைய நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஃபெஞ்சல் புயல் இன்று மாலை அல்லது இரவுக்குள் கரையை கடப்பதாகவும், அப்போது பலத்த மழை மற்றும் காற்று வீசும் என்பதால் விமான நிலையம் நாளை அதிகாலை 4.00 மணி வரை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications