பெஞ்சல் புயல் எதிரொலி.. மாமல்லபுரம், மெரினா, காசிமேட்டில் கடல் சீற்றம்.. ஆக்ரோஷமாக எழும் அலைகள்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஃபெஞ்சல் (Fengal) புயல் கரையை நோக்கி நகர்ந்து வருவதன் காரணமாக, மாமல்லபுரம் கடல் பகுதிகளில் கடல் சீற்றம் அதிகரித்து காணப்படுகிறது. சென்னை மெரினா, காசிமேடு பகுதிகளிலும் அலைகள் அதிகளவில் ஆக்ரோஷமாக எழுந்து வருகின்றன. இதேபோல, கடலூரிலும் இன்று நேற்றை விட கடல் சீற்றம் அதிகமாக காணப்படுகிறது.

வங்கக் கடலில் உருவாகியுள்ள ஃபெஞ்சல் (ஃபெங்கல்) புயல், கரையை நோக்கி 7 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருகிறது. ஃபெஞ்சல் புயல் காரைக்கால் - மாமல்லபுரம் இடையே புதுச்சேரிக்கு அருகில் இன்று மாலை கரையைக் கடக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக கடலூரில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது.

cyclone fengal weather chennai

மாமல்லபுரத்திலும் கடல் சீற்றம் அதிகமாக உள்ளது. மாமல்லபுரத்தில் பலத்த காற்று வீசுவதால் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. அலைகள் உயரமாக எழுந்து வருகின்றன. கல்பாக்கத்தில் உள்ள சட்ராஸ் என்ற மீனவ கிராமத்தில் தற்போது 13 அடி வரை கடல் அலை எழுந்து, கடல் கடுமையான சீற்றத்துடன் காணப்படுகிறது. மெரினா கடற்கரை, காசிமேடு கடற்கரை பகுதிகளிலும் கடல் சீற்றம் உள்ளது.

வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் ஃபெஞ்சல் புயலாக மாறியது. இந்தப் புயல் காரைக்கால்- மாமல்லபுரம் இடையே கடற்கரையை கடக்க உள்ளதாகவும், இதனால், காரைக்கால் மற்றும் மாமல்லபுரம் புதுச்சேரிக்கு அருகே பலத்த காற்று வீசும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

கடந்த சில நாட்களாகவே கடலூா் மாவட்ட கடல் பகுதிகளில் கடல் சீற்றம் இருந்து வந்தது. வியாழக்கிழமை இரவு தேவனாம்பட்டினம் கடற்கரையில் கடல் சீற்றம் காரணமாக கடல் நீர் அங்குள்ள கடைகளை சூழ்ந்தது. இதையடுத்து, கடை உரிமையாளா்கள் பாதுகாப்பு கருதி அங்கிருந்த பொருள்களை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு சென்றனா். மேலும், தேவனாம்பட்டினம் கடற்கரைக்கு செல்ல வேண்டாம் என்று காவல்துறை சாா்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இந்த நிலையில், நேற்று வெள்ளிக்கிழமை தேவனாம்பட்டினம் வெள்ளிக்கடற்கரை உள்ளிட்ட இடங்களில் கடல் அலைகள் ஆக்ரோஷத்துடன் எழுந்தன. இதனால், கடற்கரையோரம் மண் அரிப்புக்காக கொட்டி வைத்திருந்த கருங்கற்கள் மீது மோதி பல அடி உயரத்துக்கு எழுந்தது. இதனால், கருங்கற்கள் அரண் சேதமடைந்தது.

கடலூா் மாவட்டத்தில் 70 முதல் 90 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசும் என்பதால் மீனவா்கள் யாரும் கடலுக்குச் செல்ல வேண்டாம் எனவும், படகுகள் மற்றும் வலைகளை பாதுகாப்பான இடங்களுக்கு எடுத்துச் செல்லுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+