என் வீட்டுலயே தண்ணி.. தேங்குறது ரொம்ப கேவலமான விஷயம்..வரி கட்டுறோம்ல- எம்எல்ஏ எங்க? நடிகர் விஷால்
சென்னை: சென்னை மாநகரில் அனைத்து இடத்திலும் மழை வெள்ள நீர் தேங்குவது ரொம்ப கேவலமான விஷயம்.. ஏன் வரி கட்டுறோம் என கேள்வி கேட்க வைக்காதீங்க.. எம்.எல்.ஏக்கள் இப்பவாவாது முகத்தை தொகுதி பக்கம் காட்ட வேண்டும் என நடிகர் விஷால் சென்னை மழை வெள்ளம் தொடர்பாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
நடிகர் விஷால் இன்று வெளியிட்ட வீடியோ: எல்லாருக்கும் தெரிஞ்ச விஷயம்தான். இப்ப பெய்யுற மழையால் முதல்ல நடக்கிற விஷயம் கரண்ட் ஆப் ஆயிடும். அப்புறம் கொஞ்ச கொஞ்சமாக தெருவுல தண்ணி தேங்க ஆரம்பிச்சிடும். அப்புறமாக இருக்கிற தண்ணி எல்லாமே வீடுகளுக்குள் புக ஆரம்பித்துவிடும்.

இப்ப நான் அண்ணா நகரில் தங்கிட்டு இருக்கேன். ஏன் வீட்டுலேயே 1 அடிக்கு வீட்டுக்குள் தண்ணி வந்துருச்சு. அண்ணா நகரிலேயே இந்த கதி என்றால் அப்புறம் யோசிச்சு பாருங்க.. இதே லோ லைன் ஏரியாவில் என்ன கதின்னு பாருங்க. 2015-ல் நடக்கும் போது எல்லோரும் இறங்கி பொதுமக்களுக்கு சேவை செஞ்சோம். இப்ப 8 வருஷம் கழிச்சு அதைவிட மோசமான நிலைமை இருக்கும் போது கேள்விக்குறியாக இருக்கிறது. வெள்ளம் தொடர்பாக சென்னை மாநகராட்சி அறிவித்த திட்டம் எங்கே என தெரியவில்லை... அந்த திட்டம் என்னாச்சு? எப்ப முடிச்சாங்கன்னு தெரியலை

இது ஒரு விண்ணப்பம்தான். ஒரு ரிக்வெஸ்ட். ஒரு வாக்காளனாக கேட்கிறேன்.. நடிகனாக கேட்கவில்லை. எல்லா சென்னை தொகுதி எம்.எல்.ஏக்களும் தயவு செஞ்சு வெளியே வந்து நீங்க சரி பண்ணி கொடுத்தீங்கன்னா சரியா இருக்கும். பொதுமக்கள் சேவை செய்வதை விட்டுவிடுங்க.. அது அப்புறம்.
அந்தந்த் தொகுதி எம்.எல்.ஏக்கள் உங்க தொகுதியை வந்து வெளியே வந்து உதவி செஞ்சா பொதுமக்களுக்கு பாதுகாப்பாக, தன்னம்பிக்கையாக இருக்கும்.
Dear Ms Priya Rajan (Mayor of Chennai) and to one & all other officers of Greater Chennai Corporation including the Commissioner. Hope you all are safe & sound with your families & water especially drainage water not entering your houses & most importantly hope you have… pic.twitter.com/pqkiaAo6va
— Vishal (@VishalKOfficial) December 4, 2023
ஏன் என் வீட்டுலயே சீனியர் சிட்டிசன்ஸ் எங்க அப்பா அம்மா இருக்காங்க .. ரொம்ப பயந்து போயிருக்காங்க.. அண்ணா நகரிலேயே 1 அடி தண்ணி வீட்டுக்குள் வந்தா எப்படி இருக்கும்? எல்லாருக்கும் இது பொதுவான பிரச்சனை. இது அரசியல் அல்ல. அரசாங்கத்துக்கு எதிரான விமர்சனம் அல்ல.
ஒரு சின்ன மழை என்றாலே தி.நகரில் மழை நிக்கும். ஆனால் இப்ப பார்த்தா எல்லா இடங்களிலும் தண்ணி தேங்கி நிற்பது என்பது தர்ம சங்கடமான, கேவலமான விஷயமாக நான் பார்க்கிறேன். இது தயவு செய்து உடனடி நடவடிக்கை என்ன எடுக்க முடியுமோ சென்னை மாநகராட்சி உடனே எடுக்கனும். சென்னை மாநகராட்சி ஆணையரும் ஊழியர்களும் இறங்கி வேலை செஞ்சா நல்லா இருக்கும். ஏன்னா டேக்ஸ் (வரி) கட்டுறோம். எதற்காக வரி கட்டுறோம்னு கேட்க வெச்சுடாதீங்க. யாருமே தொகுதி பக்கம் இந்த விஷயத்துக்காக எதிர்பார்ப்பாங்க. கண்டிப்பாக இந்த நேரத்தில எம்.எல்.ஏக்கள் முகம் தெரிஞ்சா நல்லா இருக்கும்.
இவ்வாறு நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications