நிலைகுலைந்த சென்னை.. நேரில் களமிறங்கிய முதல்வர் ஸ்டாலின்! நிவாரண முகாம்களில் ஆய்வு.. முக்கிய ஆலோசனை
சென்னை: மிக்ஜாம் புயல், மழை பாதிப்பு குறித்து முதல்வர் ஸ்டாலின் சென்னையில் நேரில் களஆய்வு செய்து வருகிறார். நிவாரண முகாம்களில் தங்கி உள்ள மக்களுக்கு உணவு பரிமாறிய அவர் இன்று முக்கிய ஆலோசனையை மேற்கொள்ள உள்ளார்.
மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் அதி கனமழை பெய்துள்ளது. நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று வரை மழை வெளுத்து வாங்கியது. இதனால் சென்னையில் குடியிருப்பு பகுதிகளை மழைநீர் சூழ்ந்துள்ளது. அதோடு சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் தவித்து வருகின்றனர். மேலும் 8 பேர் வரை பலியாகி உள்ளனர். மிக்ஜாம் புயல் தற்போது சென்னையை விட்டு விலகி ஆந்திரா நோக்கி சென்றுள்ளது.
இதனால் சென்னையில் இன்று காலை முதல் மழை என்பது இல்லை.இருப்பினும் வெள்ளம் என்பது தேங்கி உள்ளது. இதனை வெளியேற்றும் பணியில் மாநகராட்சி பணியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தான் முதல்வர் ஸ்டாலின் சென்னையில் களஆய்வை தொடங்கி உள்ளார்.
அதன்படி முதல்வர் ஸ்டாலின் வடசென்னையில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். சென்னை சென்ட்ரல் கண்ணப்பர் திடல் நிவாரண முகாமில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு செய்தார். இதையடுத்து அவர் பெரியமேடு நிவாரண முகாம்களில் ஆய்வு செய்தார். அப்போது அவர் மக்களுக்கு உணவு பரிமாறினார்.
மேலும் இன்று அவர் அமைச்சர்கள், அதிகாரிகளுடன் மிக்ஜாம் புயல், மழை பாதிப்பு குறித்து ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். இந்த ஆலோசனை கூட்டத்தின்போது சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் புயல், மழை பாதிப்பு விபரங்களை அவர் கேட்டறிய உள்ளார். அதன்பிறகு பாதிப்பு விபரங்கள் கணக்கீடு செய்யப்பட்டு அறிக்கையாக மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது.
மேலும் மத்திய குழுவை தமிழகத்தில் ஆய்வு செய்ய வர செய்வது, புயல், வெள்ள பாதிப்பு நிவாரணத்தை மத்திய அரசிடம் கேட்பது தொடர்பாக இன்று நடக்கும் அமைச்சர்கள், அதிகாரிகள் உடனான ஆலோசனை கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் விவாதிக்க உள்ளார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications