‛ரொம்ப அவசரம்’.. பறந்து போன மெசேஜ்.. கூடுதலாக சென்னை விரையும் 2 என்டிஆர்எப் டீம்! ஏன் முக்கியம்?
சென்னை: மிக்ஜாம் புயலால் ஏற்பட்டுள்ள கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை மீட்கவும், நிவாரண பணிகளை மேற்கொள்ளவும் சென்னைக்கு மேலும் 2 தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் விரைய உள்ளனர்.
மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளுர், செங்கல்பட்டு மாவட்டங்கள் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளன. சென்னையில் நேற்று முன்தினம் முதல் நேற்று வரை மழை வெளுத்து வாங்கியது. இதனால் சென்னையில் குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது.

மிக்ஜாம் புயல் தற்போது ஆந்திராவில் கரையை கடக்க தொடங்கி உள்ளது. இந்நிலையில் தான் இன்று காலை முதல் சென்னையில் மழை என்பது இல்லை. இருப்பினும் பல சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் மழை வெள்ளம் இன்னும் வடியவில்லை.
இந்நிலையில் தான் மாநகராட்சி பணியாளர்கள், தீயணைப்பு வீரர்கள், மாநில பேரிடர் மீட்பு படையினர், தேசிய பேரிடர் மீட்பு படையினர் முழுவீச்சில் களமிறங்கி உள்ளனர். சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளுர் மாவட்டங்களில் இவர்கள் வெள்ள பாதிப்புள்ள பகுதிகளில் இருந்து தண்ணீர் அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் வெள்ள பாதிப்புள்ள பகுதியில் வசிக்கும் மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கி வருகின்றனர்.
இந்நிலையில் தான் இன்று சென்னையில் மழை இல்லாத நிலையில் மீட்பு பணி மற்றும் வெள்ள நிவாரண பணி விரைவுப்படுத்தப்பட்டு வருகிறது. மீட்பு பணியில் கூடுதல் வீரர்கள், பணியாளர்கள் ஈடுபட்டால் விரைவாக சென்னையை இயல்பு நிலைக்கு கொண்டு வர முடியும். இதன் ஒருபகுதியாக தமிழகத்துக்கு கூடுதலாக 2 பேரிடர் மீட்பு குழுவினர் சென்னைக்கு வர உள்ளனர்.
இந்த குழுவினர் புதுச்சேரி மற்றும் அரக்கோணத்தில் சென்னை விரைகின்றனர். ஒரு மீட்பு குழுவில் தேசிய பேரிடர் மீட்பு படையை சேர்ந்த 25 வீரர்கள் இருப்பார்கள். அதன்படி மொத்தம் 50 பேர் வருகை தர உள்ளனர். இவர்கள் வேளச்சேரி பகுதியில் மீட்பு பணியில் ஈடுபட உள்ளனர். இது வெள்ள மீட்பு பணியை இன்னும் விரைவாக்கும்.
தற்போதைய சூழலில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளுர் மாவட்டங்களில் தேசிய பேரிடர் மீட்பு படை, மாநில மீட்பு படையினர் என ஏற்கனவே 750 பேரிடர் மீட்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கூடுதலாக 2 தேசிய பேரிடர் மீட்பு குழு வீரர்கள் மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் ஈடுபட உள்ளனர்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications