மிக்ஜாம் புரட்டிப் போடும் பேய்மழை வெள்ளம்- சென்னை உட்பட இந்த 5 மாவட்டங்களுக்கு நாளை விடுமுறை- கவனம்!
சென்னை: மிக்ஜாம் புயல் மழையால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதே போல ராணிப்பேட்டை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வங்க கடலில் மையம் கொண்டுள்ள மிக்ஜாம் புயல் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களை உருக்குலைத்து போட்டு வருகிறது. சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு ஏற்கனவே இன்று பொதுவிடுமுறையும் அறிவிக்கப்பட்டது.

சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மிக்ஜாம் புயல் வரலாறு காணாத பெருமழையை கொட்டித் தீர்த்தது. சென்னை மாநகரில் மட்டும் 21 இடங்களில் அதீத கனமழையும் 59 இடங்களில் மிக கனமழையையும் 15 இடங்களில் கனமழையையும் கொட்டித் தீர்த்தது மிக்ஜாம் புயல். சென்னை உள்ளிட்ட மாவட்டங்கள் பெருமழை வெள்ளத்தில் மூழ்கி தத்தளித்துக் கொண்டிருக்கிறது.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகள், அனைத்து தனியார் நிறுவனங்களுக்கும் முன்னெச்சரிக்கையாக இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டது. அத்துடன் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேவரக் கூடாது எனவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் முதல் அதிகாரிகள் வரை தொடர் அச்சுறுத்தல் விடுத்து வந்தனர். சென்னையில் பாதிப்பு நிலவரம் மிகவும் கவலைக்குரியதாகவும் இருந்து வருகிறது.
இந்த நிலையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு நாளையும் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தனியார் நிறுவனம், அலுவலகங்களுக்கும் நாளை பொது விடுமுறை விடப்பட்டுள்ளது. அதேநேரத்தில் பால், குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளில் எந்த பாதிப்பும் இருக்காது எனவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல ராணிப்பேட்டை மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications