வலிமை இழந்த "கோர்".. மிக்ஜாம் புயலுக்கு இடையே.. சென்னைக்கு கிடைத்த ஒரே நிம்மதி.. சின்ன வெளிச்சம்

Subscribe to Oneindia Tamil

சென்னை; சென்னையில் மிக்ஜாம் புயல் காரணமாக மிக கனமழை பெய்து வரும் நிலையில்.. மழை மேகங்கள் கொஞ்சம், கொஞ்சமாக வலிமை இழக்க தொடங்கி உள்ளன.

மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையே நிலை குலைந்து போய் உள்ளது. ஆனால் இந்த மிக்ஜாம் புயல் நேரடியாக சென்னையை தாக்கவில்லை. அதாவது இந்த புயல் சென்னையில் கரையை கடக்கவில்லை. ஆனாலும் வேறு காரணங்களுக்காக இந்த புயல் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளது.

இந்த மிக்ஜாம் புயல் வங்கக்கடலில் சென்னைக்கு அருகே பயணம் செய்தது. அதாவது தெற்கு ஆந்திராவை நோக்கி இது நகர்ந்த போது சென்னைக்கு அருகே 50 கிமீ வரை வந்தது. இப்படி சென்னைக்கு அருகே வந்ததால்தான் சென்னையில் பலத்த மழை மட்டுமின்றி கடுமையான சேதங்களும் ஏற்பட்டது.

Cyclone Michaung: The core band of clouds is weakened about North Chennai

மழை எப்படி?: புயல் ஒரு கட்டத்தில் 50 கிமீ தூரம் வரை கூட சென்னையில் இருந்து இருந்தது. அதாவது புயலின் ஒரு பகுதி.. சென்னைக்கு மிக அருகே 50 கிமீ தூரம் வரை கூட இருந்தது. இந்த நேரத்தில்தான் சென்னையில் மிக கனமழை பெய்தது.

புயலுக்கு முன் ஒரு கட்டமாக தீவிர மழை மேகங்கள் சென்னைக்கு வந்தன. அதன்பின் புயல் சென்னைக்கு அருகே வந்த போது இரண்டாம் கட்டமாக இன்னும் தீவிர மழை மேகங்கள் சென்னைக்கு அருகே வந்தன. மூன்றாம் கட்டமாக புயல் நகர நகர கூடுதல் மழை மேகங்கள் சென்னைக்கு அருகே வரும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளன.

( பிரபல "லேக் வியூ" அப்பார்ட்மெண்டில்.. பார்க்கிங் கார்களை அப்படியே அடித்து சென்ற வெள்ளம்! ஷாக் வீடியோ)

உடையும் மேகங்கள்: புயல் தற்போது சென்னையைவிட்டு நகர தொடங்கி உள்ளன. கொஞ்சம் கொஞ்சமாக ஸ்ரீஹரிகோட்டா நோக்கி செல்ல தொடங்கி உள்ளது. அப்படியே தெற்கு ஆந்திராவை நோக்கி இதன் பயணம் செய்யும்.

என்னதான் புயல் பயணம் செய்தாலும் அதற்கு பின்பாக இழுத்து வரப்படும் மேகங்களும் சென்னைக்கு வரும். இந்த மேகங்கள் சென்னைக்கு மழையை கொடுக்கும். இந்த மழை கொண்ட "கோர்" மேகங்கள் தற்போது ஆங்காங்கே உடைந்து உள்ளன. முக்கியமாக வட சென்னைக்கு மேலே இருக்கும் மேகங்கள் பெரிதாக வலுவாக இல்லை.

சென்னைக்கு வந்திருக்கும் ஒரே ஆறுதல்.. இனி அடுத்த் 4-5 மணி நேரங்களில் கொஞ்சம் கொஞ்சமாக வடசென்னையில் மழை குறையும் . அங்கே கோர் மேகம் உடைந்துவிட்டதால் கொஞ்சம் கொஞ்சமாக மழை குறையும்.

அதே சமயம் தென் சென்னை அருகே இன்னும் மழை மேகங்கள் வலுவாக உள்ளன. தென் சென்னை பகுதிகளுக்கு இன்னும் முழுமையாக நிம்மதி கிடைக்கவில்லை. மாலைக்கு பிறகே தென் சென்னை கொஞ்சம் கொஞ்சமாக மழையில் இருந்து தப்பிக்க. அங்கே உள்ள மேகங்கள் இன்னும் வலுவாக உள்ளன.

Cyclone Michaung: The core band of clouds is weakened about North Chennai

எங்கே உள்ளது: இன்று பகல் 12 மணி அளவில் தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் புதுச்சேரிக்கு கிழக்கு வடகிழக்கே சுமார் 280 கிலோமீட்டர் தொலைவிலும், சென்னைக்கு கிழக்கே சுமார் 140 கிலோமீட்டர் தொலைவிலும் புயல் நிலை கொண்டுள்ளது.

இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து 04-12-2023 முற்பகல் மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் தெற்கு ஆந்திரா மற்றும் அதனை ஒட்டிய வடதமிழக கடலோரப்பகுதிகளில் நிலவக்கூடும். பிறகு தெற்கு ஆந்திரா கடலோரப்பகுதிகளை ஒட்டி வடக்கு திசையில் நகர்ந்து 05-12- 2023 முற்பகல் தெற்கு ஆந்திரா கடற்கரையை நெல்லூருக்கும் மசூலிபட்டினத்திற்கும் இடையே தீவிர புயலாக கடக்கக்கூடும், என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+