அலறவிடும் மிக்ஜாம்! பின்பற்ற வேண்டிய 7 மேட்டர்! குழந்தை இருந்தால் இதில் 4வது மேட்டர் ரொம்ப முக்கியம்
சென்னை: மிக்ஜாம் புயல் காரணமாக மழை வெளுத்து வாங்கி வரும் நிலையில், மழைக் காலத்தில் கட்டாயமாகப் பின்பற்ற வேண்டியவை என்னென்ன என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
மிக்ஜாம் புயல் இப்போது மிகத் தீவிர புயலாக மாறியிருக்கிறது. சென்னையில் இருந்து சுமார் 100 கிமீ தொலைவில் இருந்த புயல் இருக்கும் நிலையில், மழை கொட்டி வருகிறது.

சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று மாலை தொங்கிய கனமழை இப்போது வரை கொட்டி தீர்க்கிறது. இதுபோன்ற கனமழை காலத்தில் பொதுமக்கள் பின்பற்ற வேண்டிய விஷயங்கள் குறித்து நாம் பார்க்கலாம்.
முதல் விஷயம்: வானிலை என்பது நொடிக்கு நொடி மாறிக் கொண்டே இருக்கும். எனவே, மழை குறையும் என்று முன்பு வந்த வானிலை அறிக்கையை நம்பாதீர்கள். சமீபத்தில் வெளியான வானிலை முன்னறிவிப்புகளை மட்டும் பின்பற்றுங்கள். அதிகாரப்பூர்வ வானிலை அறிக்கைகள் அனைத்து ஊடகங்களிலும், சென்னை வானிலை மையம் தளத்திலும் இருக்கிறது. எனவே, எப்போதும் அதைத் தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள்.
இரண்டாவது விஷயம்:அடுத்து சென்னையில் பெரும்பாலான ஆண்டுகளில் நவம்பர். டிசம்பர் மாதங்களில் சில முறை கனமழை பெய்யவே செய்கிறது. எனவே, இதுபோன்ற காலங்களை சமாளிக்க எமர்ஜென்சி கிட்களை தாயாராக வைத்துக் கொள்ளுங்கள். கெட்டுப்போகாத உணவு, தண்ணீர், முதலுதவி பெட்டி, டார்ச் லைட், பேட்டரிகள், மொபைல் சார்ஜர், உங்களுக்குத் தேவைப்படும் மருந்துகள் அதில் இருப்பதை உறுதி செய்யுங்கள்.
மூன்றாவது மேட்டர்: முக்கியமான மேட்டர்: மேலும், முக்கிய ஆவணங்கள் மற்றும் காப்பீட்டு ஆவணங்கள் போன்றவற்றை எளிதாக நீர் செல்லாத பைகளில் போட்டு வைக்கவும்.
நான்காவது விஷயம்: மேலும், வீட்டில் குழந்தைகள் இருந்தால் பால் முக்கியமாகத் தேவை. ஆனால், இதுபோன்ற நேரங்களில் வெளியே சென்று பால் வாங்குவது சிரமம், எனவே, 90 நாட்கள் வரை கெட்டுப்போகாத பாலை வாங்கி வைத்துக் கொள்ளலாம். ஆவின் உட்பட பல்வேறு நிறுவனங்களும் இந்த கெட்டுப் போகாத பாலை விற்கிறது. அல்லது பால் பவுடரையும் வைத்துக் கொள்ளலாம்.
5ஆவது விஷயம்: அடுத்து வீடுகளில் செல்ல பிராணிகள் எதாவது இருந்தால் அவற்றைக் கட்டுப் போட வேண்டாம். இடி மின்னல் சமயங்களில் அவை அச்சப்படும். எனவே இதுபோன்ற நேரங்களில் கட்டிப் போடாமல் அருகிலேயே வைத்துக் கொள்ளவும்.
6ஆவது விஷயம்: மேலும், இதுபோன்ற மழை கொட்டும் போது மின்சார ஒயர்களில் இருந்து தள்ளியே இருக்கவும். மேலும், மொபைல், லேப்டாப் உள்ளிட்டவற்றை சார்ஜ் போட்டபடி பயன்படுத்துவதை முடிந்தவரைத் தவிர்க்கவும். மழை காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகப் பல இடங்களில் ஏற்கனவே மின் இனைப்பு துண்டிக்கப்பட்டு இருக்கும். அப்படியே மின்சாரம் இருந்தாலும் இவற்றைத் தவிர்க்கவும்.
7ஆவது விஷயம்: அடுத்து புயல் விட்டு விளாசி வரும் நிலையில் தப்பித் தவறியும் வெளியே செல்ல வேண்டாம். ஏற்கனவே சென்னை மாநகராட்சி தேவையில்லாமல் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தி இருந்தது. கனமழை, தரைக்காற்று, சாலைகளில் தேங்கி இருக்கும் மழை நீர் ஆகியவற்றை கருத்தில் கொண்டே சென்னை மாநகராட்சி இந்த அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது.
ஆனாலும் சிலர் இந்த எச்சரிக்கையைக் கருத்தில் கொள்ளாமல் வெளியே அலட்சியமாகச் சுற்றிக் கொண்டு இருக்கிறார்கள். இந்த புயல் மழையால் கார்கள் போன்ற வாகனங்களே அடித்துச் செல்லப்படுகிறது. எனவே, அரசு எச்சரிக்கையை அலட்சியம் செய்யாமல் பொதுமக்கள் வீடுகளிலேயே இருக்கவும். எப்போது நிலைமை சரியாக இருக்கிறது பொதுமக்கள் வெளியே வரலாம் என்ற அறிவிப்பை வெளியிடுகிறதோ.. அதுவரை வீடுகளிலேயே இருக்கவும்
-
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம்












Click it and Unblock the Notifications