சென்னையில் இருந்து 100 கிமீ விலகிச் சென்ற மிக்ஜாம் புயல்- ஆந்திராவில் நாளை முற்பகல் கரையை கடக்கும்!
சென்னை: சென்னையில் இருந்து மிக்ஜாம் புயல் தற்போது 100 கி.மீ தொலைவு வடகிழக்கு திசையில் விலகிச் சென்றுவிட்டது; தற்போது மணிக்கு 10 கி.மீ வேகத்தில் நகர்ந்து ஆந்திராவின் பாபட்லா அருகே நாளை முற்பகல் மிக்ஜா புயல் கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்க கடலில் உருவெடுத்த மிக்ஜாம் புயல் மிக ஆக்ரோஷம் காட்டி வருகிறது. சென்னை மாநகரை மட்டும் அல்லாது திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு என புறநகர் மாவட்டங்களையும் புரட்டி எடுத்துவிட்டது. சென்னை மாநகரமும் புறநகர் பகுதிகளும் வரலாறு காணாத பெருவெள்ளத்தை எதிர்கொண்டிருக்கின்றன. சென்னை புறநகர் ஏரிகள் அனைத்தும் நிரம்பி உபரி நீர் போக்கிடமின்றி சாலைகளிலும் குடியிருப்புகளிலும் காட்டாறு வெள்ளம் போல பாய்ந்து கொண்டிருக்கின்றன. இதனால் பல பகுதிகளில் அனைத்து போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டு தனித் தீவுகளாக்கப்பட்டன. விமான சேவை, ரயில் சேவைகளும் நிறுத்தப்பட்டுவிட்டன.

சென்னையை கடந்து பழவேற்காடு பகுதியில் நகர்ந்து சென்ற மிக்ஜாம் புயல் தற்போது சென்னையில் இருந்து 100 கி.மீ. தொலைவில் விலகி ஆந்திரா நோக்கி சென்றுவிட்டது. மணிக்கு 8 கி.மீ. வேகத்தில் நகர்ந்த மிக்ஜாம் புயல் தற்போது மணிக்கு 10 கி.மீ வேகத்தில் நகர்ந்து ஆந்திராவுக்குள் செல்கிறது.
இதனையடுத்து ஆந்திராவின் நெல்லூர், திருப்பதி, பிரகாசம், பாபட்லா, கிருஷ்ணா, மேற்கு கோதாவரி, கோனசீமா, காக்கிநாடா மாவட்டங்களுக்கு கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நெல்லூர் அருகே கிருஷ்ணபட்டனம் துறைமுகத்தில் அதீத புயல் தாக்குதலை அறிவிக்கும் 10-ம் எண் கூண்டு ஏற்பட்டுள்ளது.
வங்க கடலில் மணிக்கு 8 கிமீ நகர்ந்து செல்லும் மிக்ஜாம் புயல், ஆந்திரா மாநிலத்தில் நெல்லூர்- மச்சிலிப்பட்டணம் இடையே பாபட்லா அருகே நாளை முற்பகல் அதிதீவிர புயலாகக் கரையை கடக்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம்












Click it and Unblock the Notifications