Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Cyclone Montha: தப்பித்தது தமிழ்நாடு.. ஆந்திராவுக்கு தான் ஆபத்து? இப்போ எங்க இருக்கு ‘மொந்தா’ புயல்? ஐஎம்டி அலர்ட்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள மொந்தா புயல் (Cyclone Montha) நாளை (அக்டோபர் 28) மாலை ஆந்திர மாநிலத்தின் மசூலிப்பட்டணம் மற்றும் காக்கிநாடா இடையே கரையைக் கடக்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) எச்சரிக்கை விடுத்துள்ளது. தற்போது இது கடலில் வேகமாக வலுப்பெற்று கடும் புயலாக மாறி வரும் நிலையில், சென்னைக்கு பெரிய அளவில் பாதிப்பில்லை எனவும் ஐஎம்டி கூறியுள்ளது.

மொந்தா புயல் கரையைக் கடக்கும் போது காற்றின் வேகம் மணிக்கு 100 முதல் 110 கிலோமீட்டர் வரை இருக்கும் என்றும், கடலோர பகுதிகளில் கடல் அலைகள் ஒரு மீட்டர் உயரம் வரை எழும் அபாயம் உள்ளதாகவும் ஐஎம்டி தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக ஆந்திரா மற்றும் தென் ஒடிசா மாநிலங்களில் பலத்த மழை மற்றும் பலத்த காற்று வீச்சு ஏற்படும் என கூறப்பட்டுள்ளது. தற்போது மொந்தா புயல் தற்போது காக்கிநாடாவில் இருந்து 570 கி.மீ. தூரத்திலும், விசாகப்பட்டினத்திலிருந்து 600 கிமீ. தூரத்திலும், சென்னையில் இருந்து 520 கி.மீ தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.

Cyclone Montha imd andhra

மொந்தா புயல்

புயல் மேலும் வலுப்பெற்று வரும் 12 மணி நேரத்திற்குள் கடலோரம் நோக்கி நகரும் என கணிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு, மாநிலம் முழுவதும் உயர் எச்சரிக்கையோடு இருக்க வேண்டுமெனவும், அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல் துறையினரிடம் உயிரிழப்பு இல்லாமல் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார். மசூலிப்பட்டணம் - காக்கிநாடா பகுதி மிகவும் பாதிக்கப்படும் மண்டலமாக அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், அங்கு கூடுதல் கண்காணிப்பை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.

ஆந்திரா புயல்

மேலும், காக்கிநாடா, கிழக்கு கோதாவரி, எலூரு, மேற்கு கோதாவரி மாவட்டங்களில் அவசர நிலை நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன. பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் அக்டோபர் 27 முதல் 31 வரை மூடப்பட்டுள்ள நிலையில், கடலோர கிராமங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டு வருகின்றனர். கோனசீமா மாவட்டத்தில் மட்டும் 34 கடலோர கிராமங்களில் இருந்து 6,000க்கும் மேற்பட்டோர் தற்காலிக தங்குமிடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

ஒடிசா மழை

கர்ப்பிணிப் பெண்களும் முன்னுரிமையுடன் மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர். அதேபோல் தேசிய பேரிடர் மீட்புப்படை (NDRF) குழுக்கள் மற்றும் தானியங்கி இயந்திரங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் ஆந்திராவின் அண்டை மாநிலமான ஒடிசா, நேரடியாக புயல் தாக்கம் பெறாது என்றாலும் அதன் விளிம்பு தாக்கம் கடுமையாக இருக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. அங்கு எட்டு மாவட்டங்களான, மல்காங்கிரி, கோராப்புட், நபரங்கபூர், ராயகடா, கஜபதி, கஞ்சம், கண்டமால் மற்றும் கலஹாண்டி ஆகியவை "சிகப்பு எச்சரிக்கை" பிரிவில் வைக்கப்பட்டுள்ளன. அந்த மாநிலத்தில் சுமார் 128 மீட்பு குழுக்கள் பணி அமர்த்தப்பட்டுள்ளன.

புயல் அபாயம்

அதே நேரத்தில் ஆந்திரா மற்றும் ஒடிசா கடலோரங்களில் மீன்பிடி நடவடிக்கைகள் தடைசெய்யப்பட்டுள்ளன. 21,000க்கும் மேற்பட்ட படகுகள் துறைமுகங்களில் நிறுத்தப்பட்டுள்ளன. மீனவர்கள் அனைவரும் கரைக்கு திரும்பியுள்ளனர். புயல் தாக்கம் காரணமாக மின் இணைப்புகள், எரிபொருள் மற்றும் உணவுப் பொருட்களின் விநியோகம் தடையில்லாமல் நடைபெற மாநில அரசு சிறப்பு திட்டம் ஒன்றை அமைத்துள்ளது. அனைத்து பெட்ரோல் நிலையங்களிலும் எரிபொருள் கையிருப்பு 100 சதவீதமாக வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆந்திர மாநிலம்

மொந்தா புயல் ஆந்திர மாநிலம் நோக்கி நகரும் நிலையில், விசாகப்பட்டினம் மக்களுக்கு 2014 ஆம் ஆண்டு ஹூதூத் புயல் ஏற்படுத்திய பேரழிவு நினைவுகள் மீண்டும் எழுந்துள்ளன. அந்நேரம் வாரம் முழுவதும் மின்சாரம், தொலைபேசி இணைப்புகள் துண்டிக்கப்பட்டிருந்தது. அதுபோன்ற நிலை மீண்டும் உருவாகாமல் இருக்க மக்கள் முன்னெச்சரிக்கையாக உணவு, தண்ணீர், மருந்து, டீசல் போன்றவற்றை சேமித்து வைத்துள்ளனர்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கை

அக்டோபர் 27 முதல் 29 வரை ஆந்திரா மற்றும் தென் ஒடிசா முழுவதும் கடும் மழை பெய்யக்கூடும் என ஐஎம்டி எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் கடலோர பகுதிகளில் வசிப்போர் தேவையில்லாமல் வெளியில் செல்வதைத் தவிர்க்கவும், பாதுகாப்பான இடங்களில் தங்கவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. "மொந்தா" புயல் ஆந்திராவின் கடலோரப் பகுதிகளை நாளை மாலை தாக்கும் நிலையில், அரசு முழுமையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+