கிளம்பிருச்சுப்பா.. வங்கக்கடலில் இன்று உருவாகுது ரீமெல் புயல்! 28ம் தேதி வரை தமிழகத்தில் மழை இருக்கு
சென்னை: வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று ரீமெல் புயலாக உருவாகிறது என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. வருகிற 26ம் தேதி வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வழக்கமாக கேரளாவில் ஜூன் 1ம் தேதி தென் மேற்கு பருவமழை தொடங்கும் ஆனால் இந்த ஆண்டு மே 31ம் தேதி முன் கூட்டியே தொடங்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தென்காசி: அதற்கேற்றவாறு, கோடை மழை தமிழகத்தில் கொட்டி வருகிறது.. அந்த வகையில், மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளை ஒட்டிய கோவை, நீலகிரி, கன்னியாகுமரி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்து வருகிறது. சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் ஒரு சில இடங்களில் கடந்த 2 நாட்களாகவே லேசான மழை பெய்தது.
இப்படிப்பட்ட சூழலில், தெற்கு கேரளா, அதை ஒட்டிய பகுதிகளின் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் தேனி, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி, மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் நேற்றைய தினமும் கனமழை பெய்யும் என்று வானிலை மையம் கூறியதையடுத்து, மழையும் பொய்தது.
கன்னியாகுமரி: அதேபோல், நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, நெல்லை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நாளை 25ம் தேதி முதல் 28தேதி வரை லேசான மழையும் பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில், தேனி, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி, மற்றும் தூத்துக்குடிக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
வங்கக்கடல்: இந்நிலையில்தான், இன்று வங்கக்கடலில் புயல் உருவாகியிருக்கிறது.. இதுகுறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: தென் மேற்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்றைய தினம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகிவிட்டது.
இது வடகிழக்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக இன்று (வெள்ளிக்கிழமை) வலுப்பெறும். இது தீவிர புயலாக மாறும். இந்த தீவிர புயலுக்கு REMAL (ரெமல்) என பெயரிடப்பட்டுள்ளது. இது வரும் 26ம் தேதி வங்கதேசத்தை கடக்கும் என வானிலை மையம் கணித்துள்ளது.
மீனவர்கள்: இதனால் வரும் 26ம் தேதி வரை மீனவர்கள் சம்பந்தப்பட்ட கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள். அது போல் மக்களும் நீர் வீழ்ச்சி, மலை பிரதேசங்கள் கொண்ட இடங்களுக்கு செல்ல வேண்டாம்.
வடகிழக்கு திசையில் நகர்ந்து வடகிழக்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் 25-ம் தேதி மாலை நிலவும். இதனால் குமரிக் கடல், மன்னார் வளைகுடா, தென் தமிழக கடலோர பகுதிகள் மற்றும் அதையொட்டிய தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளுக்கு வரும் 26ம் தேதி வரை மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.
சூறைக்காற்று: அதேபோல, மேலும் மத்திய வங்கக் கடலின் மத்திய பகுதிகள், தெற்கு வங்கக் கடல், அதை ஒட்டிய மத்திய மேற்கு, மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதிகள், அந்தமான் கடல் பகுதிகளில் சூறைக்காற்று வீசும் என்பதால் வரும் 25ம் தேதி வரை அந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என மீனவர்களுக்கு வானிலை மையம் அறிவித்துள்ளது.
குமரிக் கடல், மன்னார் வளைகுடா, தென் தமிழக கடலோர பகுதிகள் மற்றும் அதையொட்டிய தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளுக்கு வரும் 26ம் தேதி வரை மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள். அதேபோல, மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதிகள், அந்தமான் கடல் பகுதிகளில் சூறைக்காற்று வீசும் என்பதால் வரும் 25ம் தேதி வரை அந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
இதனிடையே, இன்று சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, கோவை, நீலகிரி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களுக்கு மழைக்கான ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதுமட்டுமல்லாமல், கோவை, நீலகிரி மாவட்டங்களில் மழையும் ஆரம்பமாகி உள்ளது,.
-
இன்னைக்கும் மழை விடாது.. 14 மாவட்டங்களில் வெளுக்க போகுது! சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை மையம் -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி












Click it and Unblock the Notifications