உருவானது சென்யார் புயல்.. தமிழ்நாட்டுக்கு பாதிப்பா? வானிலை ஆய்வு மையம் சொன்ன தகவல்!
சென்னை: அந்தமான் அருகே மலாக்கா ஜலசந்தியில் சென்யார் புயல் உருவானது. கடந்த நவம்பர் 22 ஆம் தேதி மலாக்கா ஜலசந்தி, அதனை ஒட்டிய குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவான நிலையில் அது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று தற்போது புயலாக வலுவடைந்தது.
மலேசியா மற்றும் அதனையொட்டிய மலாக்கா ஜலசந்தி பகுதிகளில் நிலவிய காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று இன்று (நவம்பர் 26) சென்யார் புயலாக உருவாகியுள்ளது.

மலாக்கா ஜலசந்தி பகுதிகளின் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக செவ்வாய்க்கிழமை (நவ.25) வலுப்பெற்றது. இது மேலும், மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று சென்யார் புயலாக உருவெடுத்துள்ளது.
புதிய புயலுக்கு ஐக்கிய அரபு அமீரகம் வழங்கிய 'சென்யார்' என பெயரிடப்பட்டுள்ளது. சென்யார் புயல் வடக்கு சுமத்ரா பகுதியில் கரையைக் கடக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. சென்யார் புயல் 2,600 கி.மீ தொலைவியில் உள்ளதால் தமிழ்நாட்டில் பெரிய அளவில் பாதிப்பு இருக்காது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதேபோல, குமரிக்கடல் மற்றும் அதனையொட்டிய பகுதிகளில் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, நேற்று செவ்வாய்க்கிழமை (நவ.25) காலை குமரிக்கடல் மற்றும் அதனையொட்டிய தென்மேற்கு வங்கக்கடல், இலங்கை பகுதிகளில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவானது. இது தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனையொட்டிய தெற்கு இலங்கை, இந்திய பெருங்கடலில் நிலவுகிறது.
தொடர்ந்து இது, வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று (நவம்பர் 26) காலை ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்று, அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மேலும் வலுப்பெறக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
பேய் மழை வெளுக்கப் போகுது.. கோவை, நீலகிரியில் மிக கனமழை! 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
கோவை, நீலகிரியில்.. கன முதல் மிக கனமழை பெய்யும்! மொத்தம் 11 மாவட்டங்களுக்கு வார்னிங்! -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்?












Click it and Unblock the Notifications