மிக்ஜாம் புயல்: தேசியப் பேரிடர் மீட்புப் படை 21 குழுக்கள் களத்தில்-தயாராக மேலும் 8 குழுக்கள்!
டெல்லி: மிக்ஜாம் புயல் பாதித்த இடங்களில் நிவாரணம் மற்றும் மீட்பு பணியில் 21 தேசிய பேரிடர் மீட்பு குழுக்கள் ஈடுபட்டுள்ளன. மேலும் 8 குழுக்களும் நாட்டின் முப்படையும் தயாராக இருப்பதாக டெல்லியில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
வங்கக் கடலில் நிலவும் 'மிக்ஜாம்' புயல் முன்னெச்சரிக்கை தொடர்பாக மாநில அரசுகள் மற்றும் மத்திய அமைச்சகங்கள், துறைகளின் தயார் நிலையை ஆய்வு செய்வதற்காக மத்திய அமைச்சரவைச் செயலாளர் ராஜீவ் கௌபா தலைமையில் தேசியப் பேரிடர் மேலாண்மைக் குழு (என்சிஎம்எசி - NCMC) கூட்டம் புதுதில்லியில் நேற்று நடைபெற்றது. இந்திய வானிலை ஆய்வு மையத்தின் (ஐஎம்டி) தலைமை இயக்குநர், 'மிக்ஜாம்' புயலின் தற்போதைய நிலை குறித்து குழுவிடம் விளக்கினார்.

மிக்ஜாம் புயல் டிசம்பர் 5-ம் தேதி காலை ஒரு தீவிரப் புயலாக ஆந்திரா அருகே கரையைக் கடக்கும். புயல் கரையைக் கடக்கும்போது அதிகபட்சமாக 90 முதல் 100 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும். இது 110 கிலோ மீட்டர் வேகம் வரை செல்லக் கூடும்.
இது தொடர்பாக இன்று நடைபெற்ற தேசிய பேரிடர் மேலாண்மைக் குழுக் கூட்டத்தில் பேசிய அமைச்சரவைச் செயலாளர் ராஜீவ் கௌபா, இந்திய வானிலை ஆய்வு மையத்தின் முன்னறிவிப்புக்கு ஏற்ப சம்பந்தப்பட்ட மாநிலங்கள் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். உயிர் சேதம் ஏதும் ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும், பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் இருந்து மக்களை உரிய நேரத்தில் வெளியேற்றும் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.
தமிழ்நாடு, ஒடிசா, புதுச்சேரியின் தலைமைச் செயலாளர்கள் மற்றும் ஆந்திரப் பிரதேசத்தின் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் சிறப்புத் தலைமைச் செயலாளர் ஆகியோர் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர். தங்களது மாநிலங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் ஆயத்த நடவடிக்கைகள் குறித்து அவர்கள் குழுவிடம் விளக்கினர். தாழ்வான பகுதிகள் கண்டறியப்பட்டு, நிவாரண மையங்களில் மக்களைத் தங்க வைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளதாக குழுவிடம் தெரிவிக்கப்பட்டது. எஸ்எம்எஸ் மற்றும் வானிலை அறிவிப்புகள் மூலம் உள்ளூர் மொழிகளில் எச்சரிக்கைகள் வெளியிடப்படுகின்றன. கடலில் இருந்த மீனவர்கள் மற்றும் படகுகள் பாதுகாப்பாக திரும்பியுள்ளனர். அத்தியாவசியப் பொருட்கள் தேவையான அளவு இருப்பில் வைக்கப்பட்டுள்ளன. உள்ளூர் நிர்வாகங்கள் 24 மணி நேரக் கண்காணிப்பு மேற்கொண்டுள்ளன. நிலைமையை கண்காணிக்க போதுமான எண்ணிக்கையிலான அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தேசியப் பேரிடர் மீட்புப் படை (NDRF), தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம் மற்றும் புதுச்சேரியில் 21 குழுக்களை பணியில் ஈடுபடுத்தியுள்ளது. மேலும் கூடுதலாக 8 குழுக்கள் தயாராக வைக்கப்பட்டுள்ளன. கடலோரக் காவல்படை, ராணுவம் மற்றும் கடற்படையின் மீட்பு மற்றும் நிவாரண குழுக்களுடன் கப்பல்கள் மற்றும் விமானங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், ஒடிசா மற்றும் புதுச்சேரி மாநிலங்களின் மத்திய அமைப்புகள் மற்றும் அரசுகளின் ஆயத்த நடவடிக்கைகளை ஆய்வு செய்த மத்திய அமைச்சரவைச் செயலாளர், அனைத்து தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். உயிர்ச் சேதங்களைத் தவிர்ப்பதையும், உள்கட்டமைப்புகள் மற்றும் சொத்துக்களுக்கு ஏற்படும் சேதத்தை குறைப்பதையும் நோக்கமாகக் கொண்டு செயல்பட வேண்டும் என்று அவர் கூறினார். பாதிக்கப்படக் கூடிய மக்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றும் பணியை உரிய நேரத்தில் மேற்கொள்ள வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார். உள்ளூர் மொழிகளில் சரியான நேரத்தில் எச்சரிக்கைகளை அனுப்ப வேண்டும் என்றும் அவர் கூறினார்.
துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் அமைச்சகம், பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம், இந்திய கடலோரக் காவல்படை ஆகியவற்றின் பணியாளர்கள், படகுகள், மற்றும் கப்பல்கள் ஆகியவற்றை உடனடியாக ஆபத்து இல்லாத பகுதிக்கு மாற்ற அமைச்சரவை செயலாளர் அறிவுறுத்தினார். தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், ஒடிசா மற்றும் புதுச்சேரி அரசுகளுக்குத் தேவையான அளவு தேசியப் பேரி்டர் மீட்புக் குழுக்கள் தேவைக்கேற்ப அனுப்பி வைக்கப்படும் என்றும், அனைத்து மத்திய அமைப்புகளும் அனைத்து உதவிகளையும் வழங்கத் தயாராக இருப்பதாகவும் அவர் உறுதியளித்தார்.
கூட்டத்தில், தமிழ்நாடு, ஒடிசா மற்றும் புதுச்சேரியின் தலைமைச் செயலாளர், ஆந்திர மாநில வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை சிறப்பு தலைமைச் செயலாளர், மத்திய உள்துறைச் செயலாளர், மீன்வளத் துறைச் செயலாளர், மின்துறைச் செயலாளர், துறைமுகம், கப்பல் துறை செயலாளர், தொலைத்தொடர்புத் துறைச் செயலாளர், பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். தேசியப் பேரிடர் மீட்புப் படை, கடலோரக் காவல்படை ஆகியவற்றின் மூத்த அதிகாரிகளும் இதில் கலந்து கொண்டனர்.
-
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம் -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
2010ல் அதிமுக மாவட்ட பொறுப்பில் இருந்தேன்.. எடப்பாடியிடம் ஜனநாயகம் இருக்காம்.. காளியம்மாள் பேட்டி! -
ரஷ்யாவிற்கு சுக்கிர திசை.. அமெரிக்காவே திறந்து விட்ட புதிய வழி.. பல ஆயிரம் கோடி லாபம் கொட்டுகிறது -
தேமுதிகவால் திமுக கூட்டணியில் மற்ற கட்சிகளுக்கு நெருக்கடியா – ஒரே வார்த்தையில் முடித்த பிரேமலதா -
அமைதி வேண்டாம்! எங்களிடம் நீங்க நினைக்காத அஸ்திரம் உள்ளது! அதிர வைத்த புது சுப்ரீம் லீடரின் வார்னிங் -
தேமுதிக தொகுதிகளை குறைக்க திமுக பேச்சுவார்த்தை.. டென்ஷனில் பிரேமலதா விஜயகாந்த்.. ஸ்டாலினின் கேம்! -
உலகை கண்ட்ரோல் செய்யும் "நிழல்" கப்பல்கள்.. அப்போ நாம் கண்ணால் காண்பது எல்லாமே பொய்யா?












Click it and Unblock the Notifications