ஒடிசாவில் பேய்மழை.. 6 மணிநேரம் கரையை கடந்த ‛டானா’ புயல்.. அடுத்து என்ன? வானிலை மையம் விளக்கம்
புவனேஸ்வர்: வங்கக்கடலில் உருவான டானா புயல் 6 மணிநேரம் தீவிர புயலாகவே ஒடிசாவில் கரையை கடந்துள்ளது. இந்த புயல் காரணமாக ஒடிசாவின் பல மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கி வரும் நிலையில் இன்று பிற்பகலுக்குள் தீவிர புயல், புயலாக வலுவிழக்க உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக்கடலில் கடந்த 21ம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவியது. இது நேற்று முன்தினம் புயலாக வலுப்பெற்றது. 'டானா' என பெயரிடப்பட்ட இந்த புயல் என்பது நேற்று தீவிர புயலாக மாறியது. இந்த புயலால் தமிழகத்துக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்று அறிவிக்கப்பட்டது.

இதற்கு புயல் ஒடிசா - மேற்கு வங்கம் நோக்கி நகர்ந்து செல்வதே காரணமாகும். அதோடு ‛டானா' புயல் ஒடிசாவின் புரி மற்றும் மேற்கு வங்க மாநிலத்தின் சாகர் தீவுகளுக்கு இடையே இன்று அதிகாலை கரையைக் கடக்க கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.
அதன்படி நள்ளிரவு 12.20 மணிக்கு டானா புயல் கரையை கடக்க தொடங்கியது. மணிக்கு 110 முதல் 120 கிலோமீட்டர் வேகத்தில் சூறைக்காற்றுடன் ‛டானா' புயல் கரையை கடக்க தொடங்கியது. சுமார் 6 மணிநேரத்துக்கு பிறகு இந்த புயல் இன்று அதிகாலையில் ஒடிசாவின் பிதர்கனிகா - தாம்ரா இடையே கரையை கடந்தது. ஒடிசாவின் தீவிர புயலாகவே கரையை கடந்துள்ளது. புயல் கரையை கடந்த கடற்கரை பகுதிகளில் 120 கிலோமீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீசியதோடு, கனமழை கொட்டி வருவதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மேலும் வானிலை மையம் தரப்பில், ‛‛இந்த புயல் தொடர்ந்து வலுவிழக்க உள்ளது. தற்போது தீவிர புயலாக உள்ள ‛டானா' வலுவிழந்து புயலாக மாற உள்ளது. தற்போது ‛டானா' புயல் ஒடிசாவின் பாரதீப்பில் வடகிழக்கில் 60 கிலோமீட்டர் தொலைவிலும், ஒடிசாவின் தாம்ராவில் இருந்து தென்கிழக்கில் 20 கிலோமீட்டர் தொலைவிலும், மேற்கு வங்க மாநிலத்தின் சாகர் தீவுக்கு தென்மேற்கு திசையில் 150 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
12 கிலோமீட்டர் வேகத்தில் இந்த புயல் என்பது நகர உள்ளது. இந்த புயல் காரணமாக ஒடிசாவில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. அதேபோல் அதிகபட்சமாக 2 அடி உயரத்துக்கு கடல் அலைகள் எழுந்தன. ஒடிசாவின் ஜகத்சிங்பூர், கேந்திரபாரா, பத்ரக் மற்றும் பால்சோட் மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. குறிப்பாக பத்ரக் மாவட்டத்தின் பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்துள்ளன. மின்சாரங்கள் தடைப்பட்டுள்ளன.
ஒடிசாவில் இரவு மற்றும் அதிகாலை வேளைகளில் புயல் கரையை கடந்ததால் அங்குள்ள சேதங்கள் குறித்த விரிவான தகவல்கள் எதுவும் தற்போது வரை வெளியாகவில்லை. இதுபற்றி இன்னும் சற்று நேரத்தில் மாவட்ட நிர்வாகங்கள் சார்பில் அரசுக்கு முழு தகவல் அளிக்கப்பட உள்ளது. அதன்பிறகு சேதங்கள் குறித்த விபரம் என்பது வெளியாகும். இருப்பினும் அதிர்ஷ்டவசமாக ‛டானா' புயல் காரணமாக ஒடிசா மற்றும் மேற்கு வங்கத்தில் பெரிய அளவில் சேதம் ஏற்படவில்லை என்று தான் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த புயல் காரணமாக ஒடிசாவில் 4 லட்சமும் பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர். 7,200 புயல் நிவாரண முகாம்களை ஒடிசா அரசு தொடங்கி அதில் மக்களை தங்க வைத்துள்ளது. அங்கு அவர்களுக்கு தேவையான உணவு, குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. தற்போது புயல் கரையை கடந்துள்ளதாலும் மழை பெய்து வருகிறது. இதனால் அவர்கள் தொடர்ந்து நிவாரண முகாம்களிலேயே தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
மூத்த திரிணாமுல் தலைவர் மண்டை உடைப்பு.. ரத்தம் கொட்ட கொட்ட பானர்ஜி செய்த சம்பவம்! பரபரப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications