Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நெல்லை மாவட்டத்திற்கு கன மழை.. மக்களுக்கு மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை! இதையெல்லாம் செய்யாதீங்க

Subscribe to Oneindia Tamil

திருநெல்வேலி: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்து வருகிறது. இந்நிலையில், திருநெல்வேலி மாவட்டத்திற்கு அடுத்த 3 நாட்களுக்கு மிதமானது முதல் கனமழை வரை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. எனவே அம்மாவட்ட ஆட்சியர் சில அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.

தமிழகத்தில் வழக்கம் போல மார்ச் தொடக்கத்தில் வெயில் சுட்டெரிக்க தொடங்கிவிட்டது. மார்ச் மாதத்தின் முடிவிலும், ஏப்ரல் தொடக்கத்திலும் பல மாவட்டங்களில் வெயில் 100 டிகிரி ஃபாரான்ஹீட்டை கடந்து பதிவாகியிருந்தது. இந்நிலையில் கோடை மழை தொடங்கியுள்ளது. மே மாதம் முதல் வாரத்தில் தென் மாவட்டங்களில் தொடங்கிய மழை, கொஞ்சம் கொஞ்சமாக வட மாவட்டங்கள் பக்கமும் தலையை காட்டியிருக்கிறது.

District Collector advises people to be safe as Tirunelveli is expected to receive heavy rain

எனவே சென்னை வெயிலின் தாக்கம் குறைந்திருக்கிறது. ஆனால் மறுபுறம் மழை சற்று தீவிரமடைந்திருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. மழை காரணமாக நீர் நிலைகள் நிரம்ப தொடங்கியுள்ளன. சில இடங்களில் மின்னல் தாக்கி உயிரிழப்பும் ஏற்பட்டிருக்கிறது. எனவே பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

குறிப்பாக திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் இது குறித்து எச்சரித்துள்ளார். x சோஷியல் மீடியா தளத்தில் இது குறித்து பதிவிட்டுள்ள அவர், "திருநெல்வேலி மாவட்டத்திற்கு அடுத்த 3 நாட்களுக்கு மிதமானது முதல் கனமழை எச்சரிக்கையும் 18 மற்றும் 19ஆம் தேதிகளுக்கு 'ஆரஞ்சு' எச்சரிக்கையும் வானிலை ஆய்வு மையத்தால் வழங்கப்பட்டுள்ளது.

எனவே பொதுமக்கள் தகுந்த முன் எச்சரிக்கையுடன் பாதுகாப்பாக இருக்கும்படியும் மழை நேரங்களில் மரங்கள், மின்கம்பங்கள், நீர் நிலைகள் அருகில் செல்ல வேண்டாம் எனவும் கேட்டுக்கொள்ளப்படுகிறது" என்று கூறியுள்ளார்.

முன்னதாக இன்று காலை வெளியாகியிருந்த வானிலை அறிவிப்பில் "தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு இலங்கை கடலோரப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. எனவே,

இன்று தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 கிலோ மீட்டர் முதல் 50 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

தேனி, விருதுநகர் மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி. இராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, மதுரை, திண்டுக்கல், நீலகிரி, திருப்பூர் மாவட்டங்கள் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

நாளை தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 கிலோ மீட்டர் முதல் 50 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, இராமநாதபுரம், மதுரை, விருதுநகர், சிவகங்கை, தென்காசி, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

17ம் தேதி தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 கிலோ மீட்டர் முதல் 50 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

கன்னியாகுமரி, திருநெல்வேலி. தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, தென்காசி, விருதுநகர், நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, ஈரோடு, நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், கரூர், திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும்.

18ம் தேதியை பொறுத்த அளவில், தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 கிலோ மீட்டர் முதல் 50 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், இராமநாதபுரம், மதுரை, விருதுநகர், சிவகங்கை, தேனி, திண்டுக்கல், நீலகிரி. கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி,தினப்பத்தூர். கரூர், திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

19ம் தேதி தமிழகத்தின் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 கிலோ மீட்டர் முதல் 50 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

தேனி, தென்காசி, கன்னியாகுமரி, கோயம்புத்தூர், நீலகிரி மாவட்டங்கள் மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தின் மலை பகுதிகளில் ரிஸ இடங்களில் கன முதல் மிக கனமழையும், தூத்துக்குடி, ராமநாதபுரம். விருதுநகர், மதுரை, சிவகங்கை, திண்டுக்கல், திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், கரூர், திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம். மயிலாடுதுறை, புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது" என்று தெரிவிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+