அடப்போங்கயா.. சென்னையில் வெளியே வந்து.. வானத்தை பார்த்தவர்களுக்கு ஷாக்.. இப்படி ஆகிடுச்சே!
சென்னை: தமிழ்நாட்டில் இந்த வருடம் புலி வருது கதையா புயல் வருது கதை மாறி உள்ளது. இந்த புயல் வருது.. அந்த புயல் வருது என்று வானிலை ஆய்வாளர்கள் கூற.. எந்த புயலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாமல் டாட்டா காட்டி உள்ளது.
சமீபத்திய நாட்களாக இணையத்தில் வெற்றிமாறன் மீம் ஒன்று வைரலாகி வருகிறது. ஆடியோ லாஞ்சில் தொடக்கத்தில் கோபமாக கத்தும் வெற்றிமாறன் அடுத்த நொடியே அப்படியே மகிழ்ச்சியாக சிரித்தபடி பேசும் வைரல் மீம் அது. சென்னையின் வானிலை இப்போது அப்படித்தான் மாறி உள்ளது. பெரிய புயல் வரப்போகிறது.. எல்லாம் மாறப்போகிறது.. மழை அடித்து வெளுக்க போகிறது என்று அச்சத்தோடு இருந்தவர்களுக்கு.. பெரிய ஏமாற்றமே மிஞ்சியது.
வெற்றிமாறன் கோபமாக இருப்பது போல வந்த டிட்வா புயல்.. கொஞ்ச நேரத்தில் அப்படியே சிரித்தபடி.. ஒண்ணுமே இல்லை என்பது போல காணாமல் போய்விட்டது.

சென்னையில் மழை இல்லை
கடந்த 3 வாரங்களில் மட்டும் கிட்டத்தட்ட 3 புயல்கள் உருவாகிவிட்டன. நானும் ரவுடிதான் என்று வீராப்பாக வரும் புயல்கள்.. அப்படியே வரட்டாம் மாமே டுர்ர்ர் என்று கூறிவிட்டு எஸ்கேப் ஆகி விடுகிறது.
மொந்தா புயல் முதலில் உருவானது.. ஆஹா பெயரே இப்படியே இருக்கே.. என்று பயப்பட்டால்.. சுகர் வந்த சுனாமி போல எதுவும் செய்யாமல் காணாமல் போய்விட்டது மொந்தா புயல். அடுத்த வந்த சென்யார் புயலும்.. நடு பெஞ்சில் அமர்ந்து இருக்கும் அமைதியான மாணவன் போல.. எதுவும் செய்யாமல் மறைந்து. தோற்றம் எழுதுவதற்கு முன் மறைவு தேதி எழுதும் அளவிற்கு வேகமாக ஓடிவிட்டது.
இப்படிப்பட்ட நிலையில்தான் வங்கக்கடலில் தற்போது டிட்வா புயல் மையம் கொண்டு உள்ளது. இந்த புயலும் இப்போது எந்த பெரிய தாக்கத்தையும் ஏற்படுத்தாமல் அப்படியே காணாமல் போய்விட்டது. வங்கக்கடலில் தற்போது இந்த புயல் பெரிதாக தாக்கத்தை ஏற்படுத்தாமல் தாழ்வு மண்டலமாக வலுவிழந்து உள்ளது.
இந்த புயல் சென்னையில் இருந்து 250 கிமீ தூரத்தில் உள்ளது. ஆனால் வறண்ட காற்று காரணமாக புயல் வலிமை இழந்துவிட்டது. கடுமையான வறண்ட காற்று காரணமாக பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாமல் புயல் வலிமை இழந்துவிட்டது. ஆனாலும் டெல்டாவிற்கு.. அதாவது நாகப்பட்டினத்திற்கு 80 கிமீ தூரத்தில் இருப்பதால் டெல்டாவில் மழையை கடுமையாக கொடுத்து வருகிறது. இந்த புயல் காரணமாக டெல்டாவில்தான் கனமழை பெய்து வருகிறது.
காலையில் வானத்தை பார்த்தவர்களுக்கு ஷாக்
ஆனால் சென்னையில் பெரிதாக மழை இல்லை. அதிகாலையில் வெளியே வந்து வானத்தை பார்த்த போது சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் மேகமூட்டம் இருந்தது. சில இடங்களில் சாரல் மழைகூட பெய்தது.
ஆனால் நேரம் செல்ல செல்ல வானிலை மாறியது. அப்படியே சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் வெயில் அடிக்க தொடங்கியது.
புயல் காரணமாக ஏற்பட்ட காற்று பலமாக வீசியது ஒரு பக்கம் இருந்தாலும்.. குளிரான வானிலை நிலவி வந்தாலும்.. வெயில் திடீரென சென்னையின் பல இடங்களில் அடித்தது. சென்னையில், அரும்பாக்கம், கோயம்பேடு, காசிமேடு , ராயப்பேட்டை, கிண்டி, வடபழனி ,திருவொற்றியூர் , எண்ணூர், தேனாம்பேட்டை, அண்ணா சாலை, மெரினா கடற்கரை, சைதாப்பேட்டை, நுங்கம்பாக்கம், ஆகிய பகுதிகளில் இரவு மழை பெய்தது. ஆனால் பகல் நேரத்தில் அப்படியே வெயில் அடிக்க தொடங்கி உள்ளது. மழை வரும்.. வானிலை மாறும் என்று எதிர்பார்ப்போடு இருந்தவர்களுக்கு.. கடைசியில் ஏமாற்றமே மிஞ்சியது!
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications