மருத்துவமனையில் இருந்தாலும்.. மக்கள் மீது விஜயகாந்த் காட்டிய அக்கறை! என்னன்னு பாருங்க!
சென்னை: சென்னை மியாட் மருத்துவமனையில் சளிக்காக சிகிச்சை பெற்று வந்த நிலையிலும் மக்கள் மீது அவருக்கு இருக்கும் அக்கறையையே அவரது செயல்பாடு காட்டுகிறது.
கருப்பு வைரம் விஜயகாந்த்! இவரை யாருமே குறை சொல்லிவிட முடியாது. சினிமா துறையிலும் சரி அரசியல் வாழ்விலும் சரி! விஜி வீட்டுக்கு போனால் நிச்சயம் வயிறார சாப்பிட்டு வரலாம் என கஷ்ட காலத்தில் வாய்ப்பு தேடும் பலரும் எண்ணுவதுண்டு.

இதற்காகவே அவரது வீட்டில் அணையா அடுப்பு செயல்பட்டு வருகிறது. படங்களில் நடித்த போதும் கூட அவரது காட்சிகள் முடிந்துவிட்டால் கேரவனில் உட்கார மாட்டாராம். மற்றவர்களின் ஷாட்களை பார்ப்பாராம். இல்லாவிட்டால் லைட்மேன்களும் பேசிக் கொண்டிருப்பாராம்.
சில நேரங்களில் ஒரு துண்டை விரித்து லைட் மேன்களுடனேயே தூங்கி விடுவாராம். இப்படி எளிமையின் சிகரமாக இருக்கும் விஜயகாந்தை ஒருத்தர் கூட விமர்சித்து பேச வாய்ப்பே இல்லை. அது போல் தன்னால் எந்த தயாரிப்பாளரும் நஷ்டமாக கூடாது என்பதிலும் அவர் உறுதியாக இருப்பாராம். பணம், பணம் ஏன் அலைகிறீர்கள்.
கடைசியில் போகும் போது கோவணத்தை கூட உருவிடவிட்டுதான் தகனம் செய்கிறார்கள் என கட்சி கூட்டங்களில் பேசி பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளார். இவரது திருமண மண்டபம் இடிக்கப்பட்ட போதுக் கூட அரசியல் வாழ்க்கையிலிருந்து பின்வாங்கவில்லை. கூட்டணி கட்சியாக அதிமுகவுடன் இருந்த போது பதவிதான் முக்கியம் கட்சிதான் முக்கியம் என சட்டசபையில் மக்கள் நலன் கருதி பேசாமல் இருந்திருந்தால் இன்று தேமுதிக இந்த நிலைக்கு போயிருக்காது.
அவர் எதற்கும் கவலைப்படாமல் மக்கள் மக்கள் என்றே இருந்து வருகிறார். அண்மைக்காலமாக உடல்நலம் பாதிக்கப்பட்ட போது கூட தொண்டர்களுடன் பேச முடியவில்லையே, மக்களுடன் பழக முடியவில்லையே என்ற கவலைதான் அவருக்கு இருந்ததாம். இப்படிப்பட்ட விஜயகாந்த் 2011 ஆம் ஆண்டுக்கு பிறகு அவருடைய கட்சி கூட்டணி வைத்ததெல்லாம் சூழலுக்கு ஏற்க எடுக்கப்பட்ட முடிவுகளாகும்.
அப்படியும் தொண்டர்கள் கூறியதற்காக அதிமுக கூட்டணியிலிருந்து வெளியே வந்தார் விஜயகாந்த். கடந்த மாதம் 18ஆம் தேதி காய்ச்சல், சளி காரணமாக நந்தம்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் விஜயகாந்த் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு நெஞ்சு சளிக்கான சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவர் உடல்நலத்துடன் இருக்கிறார் என பிரேமலதா அறிக்கை வாயிலாக தெரிவித்துள்ளார்.
அது போல் டிரக்கியாஸ்டமி செய்ததாக கிளம்பும் புரளிகளையும் கேப்டன் புகைப்படத்தை போட்டு பிரேமலதா தவிடுபொடியாக்கிவிட்டார். அவர் விரைவில் வீடு திரும்பவுள்ளார். இந்த நிலையில் பிரேமலதா கடந்த 5ஆம் தேதி ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் சென்னையில் மழை நீரை போர் கால அடிப்படையில் அகற்றுங்கள் என வெளியிட்டுள்ளார். பொதுவாக அறிக்கைகளை தேமுதிக தலைவர் விஜயகாந்த்தான் வெளியிட்டுள்ளார்.
தற்போது அவர் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வருவதால் அவருக்கு பதில் பொருளாளர் பிரேமலதா வெளியிட்டுள்ளார். ஆனால் இதை விஜயகாந்த் கூறியே அவர் வெளியிட்டிருப்பார் என்கிறார்கள். விஜயகாந்தை மியாட்டில் பிரேமலதா கண்ணும் கருத்துமாக கவனித்து வருகிறார். இப்படிப்பட்ட சூழலில் கூட தலைவர் பேச்சை கேட்டு மக்களுக்காக பிரேமலதா அறிக்கை வெளியிட்டிருக்கிறார் என்றால் அவருக்கு மக்கள் மீது எத்தனை அக்கறை என்பதையும் சிகிச்சை பெறும் போதும் மக்கள் மீது விஜயகாந்துக்கு இருக்கும் அக்கறையையும் பலர் பாராட்டி வருகிறார்கள்.
-
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு!












Click it and Unblock the Notifications