சென்னை வெள்ளம்: நிவாரண பணிகளில் இணைந்து பணியாற்ற வாருங்கள்..திமுகவினருக்கு முதல்வர் ஸ்டாலின் அழைப்பு
சென்னை: மிக்ஜாம் புயலால் சென்னையில் மிகப்பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில், நிவாரண பணிகளில் ஈடுபட்டு வரும் அதிகாரிகளோடு, கழகத்தினரோடு இன்னும் பல தோழர்கள் உடனே தோள் சேர்ந்து நிவாரணப் பணிகளில் ஈடுபட வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.
தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயலாக வலுப்பெற்றது. இந்த மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை ஸ்தம்பித்து போனது. நேற்று முன் தினம் இரவு முதல் பெய்த மழை நேற்று நள்ளிரவு வரை தொடர்ந்து. இந்த மழையால் சென்னை வெள்ளக்காடாக மாறியது. மேலும் சென்னை மக்களின் இயல்பு வாழ்க்கை அடியோடு முடங்கியது.

தற்போது ஆந்திராவில் புயல் கரைய கடந்தாலும் சென்னையில் பல்வேறு இடங்களில் இந்த புயலின் தாக்கத்தால் இன்னும் இயல்பு நிலை திரும்பவில்லை. சென்னையின் பல்வேறு இடங்களில் தண்ணீர் தேங்கி உள்ளது. மேலுல் தண்ணீர் தேங்கி வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் பால், தண்ணீர் போன்ற அத்தியாவசிய பொருட்கள் இன்றியும் தத்தளித்து வருகிறார்கள்.
எனினும் தமிழக அரசு வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருப்பவர்களுக்காக உணவு பொட்டலங்களை வழங்கி வருகிறது. மேலும் நிவாரண பணிகளை போர்க்கால அடிப்படையில் செய்து வருகிறது. இந்த பணிகளில் தமிழக அரசு அதிகாரிகள், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் உள்ளிட்டோர் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலயில், நிவாரண பணிகளில் ஈடுபட்டு வரும் அதிகாரிகளோடு, கழகத்தினரோடு இன்னும் பல தோழர்கள் உடனே தோள் சேர்ந்து நிவாரணப் பணிகளில் ஈடுபட வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.
அமைச்சர்கள், அதிகாரிகள், காவல்துறையினர், தூய்மைப் பணியாளர்கள், மாநகராட்சிப் பணியாளர்கள் என ஒட்டுமொத்த அரசு இயந்திரமும் நம்மைச் சூழ்ந்திருக்கும் #CycloneMichaung பேரிடரின் பாதிப்புகளை விரைந்து களையப் பாடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
— M.K.Stalin (@mkstalin) December 5, 2023
களத்தில் இறங்கி உதவிகள் செய்துகொண்டிருக்கும்… pic.twitter.com/FdZdPmThsA
இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:- அமைச்சர்கள், அதிகாரிகள், காவல்துறையினர், தூய்மைப் பணியாளர்கள், மாநகராட்சிப் பணியாளர்கள் என ஒட்டுமொத்த அரசு இயந்திரமும் நம்மைச் சூழ்ந்திருக்கும் #CycloneMichaung பேரிடரின் பாதிப்புகளை விரைந்து களையப் பாடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
களத்தில் இறங்கி உதவிகள் செய்துகொண்டிருக்கும் கழகத்தினருடன், இன்னும் பல தோழர்கள் உடனே தோள் சேர்ந்து நிவாரணப் பணிகளில் ஈடுபட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். பாதிப்புகளில் இருந்து மீண்ட பகுதிகளைச் சேர்ந்த கழகத் தோழர்கள் விரைந்து வாருங்கள்!.. இவ்வாறு ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications