சென்னை மக்களே உங்கள் பகுதியில் மின்சாரம் வந்துவிட்டதா? உடனே இதை செய்ங்க!
சென்னை: உங்கள் பகுதிகளில் மின்சாரம் வந்துவிட்டதா, அப்படி வராவிட்டால் உடனே இதை செய்யுங்கள்.
வங்கக் கடலில் நிலைக் கொண்டிருந்த மிக்ஜாம் புயல் தலைநகர் சென்னை புரட்டு புரட்டி எடுத்துவிட்டது. சென்னைக்கு 100 கி.மீ. தொலைவில் புயல் இருந்த நிலையில் பயங்கர காற்று வீசியதால் மின்சாரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்த பேய் மழையால் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியது. பல இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது.

பள்ளிக்கரணை, மேடவாக்கம், வேளச்சேரி, கோவிலம்பாக்கம், மடிப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் ஏரிகளிலிருந்து தண்ணீர் 4 அல்லது 5 அடிக்கு தேங்கியுள்ளது. இதனால் அந்த பகுதியினர் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் தவித்து வருகிறார்கள். பலர் மாடிகளில் தஞ்சமடைந்தனர்.
குழந்தைகளுக்கு பால் வாங்க முடியாத சூழலில் அவர்கள் அவதிப்பட்டனர். வீடுகளுக்குள் தண்ணீர் வந்துவிட்டதால் வீட்டிற்குள் விஷஜந்துக்கள் வந்துவிடுமோ என்ற அச்சத்திலேயே இருந்தனர். மின்சாரம் இல்லாததால் இரவை டார்ச் லைட் உதவியுடன் கழித்தனர். ஆனாலும் அதில் சார்ஜ் போட முடியாத நிலையால் அதுவும் கைவிட்டுவிட்டது.
புறநகர் பகுதிகளில் தண்ணீரின் அளவு ஏறிக் கொண்டே இருக்கிறதால் மக்கள் அச்சத்துடன் உள்ளனர். இந்த நிலையில் மிக்ஜாம் புயல் கடந்துவிட்டதால் ஆங்காங்கே மின்சாரம் கொடுக்கப்பட்டு வருகிறது. முகப்பேர் உள்ளிட்ட பகுதிகளில் மாலை 5 மணிக்கு மின்சாரம் வந்தது. மயிலாப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் இரவு 8 மணிக்குத்தான் மின்சாரம் வந்தது.
இன்னும் தண்ணீர் அதிகமாக தேங்கியுள்ள பகுதிகளில் தண்ணீர் வடிந்தால்தான் மின்சாரம் என்ற நிலை உள்ளது. இந்த நிலையில் தன்னார்வலர்கள் பலர் தங்களால் முடிந்த உதவிகளை பாதிக்கப்பட்ட மக்களுக்கு செய்து வருகிறார்கள். உணவு, குடிநீர், பிஸ்கட், பிரட், உள்ளிட்டவைகளை வழங்கி வருகிறார்கள்.
இந்த நிலையில் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது: போரூர், துரைப்பாக்கம், மேடவாக்கம், முடிச்சூர், பள்ளிக்கரணை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்தவர்கள் உதவிகள் தேவைப்பட்டால் கோரலாம் என தெரிவித்துள்ளார். எனவே யாராவது பால், உணவு, மின்சாரம் இன்றி தவிர்ப்பவர்கள் உடனே பயன்படுத்திக் கொள்ளலாம். உங்கள் பகுதியில் மின்சாரம் வந்துவிட்டதா மக்களே!












Click it and Unblock the Notifications