சென்னையில் 8 நாள்களுக்கு கனமழை! ஃபுல்பார்மில் என்று? இது அதுவாக இருக்குமோ!.. நார்வே சொன்ன குட் நியூஸ்
சென்னை: சென்னையில் 8 நாட்களுக்கு மழை பெய்யும் என நார்வே வானிலை மையம் கணித்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த வாரம் தொடங்கிவிட்டதாக வானிலை மையம் அறிவித்தது. இந்த நிலையில் கடந்த சில தினங்களாகவே சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

இந்த நிலையில் வடகிழக்கு பருவமழையானது வங்கக் கடலில் புயல் உருவாகும் போது தீவிரமடைய வாய்ப்பு உள்ளது. அந்த வகையில் தற்போது எந்த புயலும் உருவாகும் வகையில் தகவல்கள் ஏதும் இல்லை. நேற்று முதல் தமிழகத்தில் கனமழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்திருந்தது.
அதன்படி செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, சிவகங்கை, கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், கன்னியாகுமரி, நெல்லை ஆகிய 14 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
இன்றைய தினம் கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், தேனி, மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சை உள்ளிட்ட 14 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை முதல் நவம்பர் 3ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அது போல் அக்டோபர் மாதம் வடகிழக்கு பருவமழை சுமாராகதான் இருக்கும் என சொல்லப்பட்டுள்ளது. எனவே வடகிழக்கு பருவமழை வரும் நவம்பர் மாதம் முதல் ஆக்டிவ்வில் இருக்கும். இந்த மழை தற்போது வரை இயல்பை விட 46 சதவீதம் குறைவாக பதிவாகியுள்ளதாகவே தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சென்னையில் 8 நாட்களுக்கு மழை பெய்யும் என நார்வே வானிலை மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி அக்டோபர் 30, 31 ஆம் தேதி வானம் மேகமூட்டமும் வெயிலும் இருக்கும். இதைத் தொடர்ந்து நவம்பர் 1 ஆம் தேதி மதியமும் இரவும் மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அது போல் நவம்பர் 2ஆம் தேதி இரவு, மதியம், மாலை வேளைகளில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக தெரிகிறது. 3ஆம் தேதிதான் ஆட்டமே ஆரம்பிக்கிறது. மதிய வேளையில் கனமழை பெய்யும்.
அது போல் 4ஆம் தேதி காலை, மதியம், மாலை வேளைகளில் மிதமான மழை பெய்யும். நவம்பர் 5ஆம் தேதி லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. நவம்பர் 6 ஆம் தேதி இரவும் காலையும் கனமழை வெளுக்க போகிறது. மாலை வேளையில் லேசான மழை பெய்யும். நவம்பர் மாதம் 7ஆம் தேதி இரவும் மதியமும் லேசான மழை பெய்யும். மாலை நேரத்தில் கனமழை பெய்யும். அது போல் 8ஆம் தேதி காலையும் மதியமும் ஒரு சில பகுதிகளில் மிதமான மழை பெய்யும். ஆக மொத்தம் நார்வே ரிப்போர்ட் படி 2ஆம் தேதி முதலே கனமழை பெய்ய வாய்ப்பிருக்கிறது. ஒரு வேளை ஏதாவது காற்றழுத்தம் உருவாகிறதா என தெரியவில்லை.
-
AirTrunk: 3 லட்சம் கோடி மெகா முதலீடு.. சென்னை அம்பத்தூரில் ரூ.10,000 கோடியில் அஸ்திவாரம்! -
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
பேய் மழை வெளுக்கப் போகுது.. கோவை, நீலகிரியில் மிக கனமழை! 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
தமிழக மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் 34 'ஹார்டு டிஸ்க்குகளை திருடியவர்கள் குறித்து புதிய தகவல்கள் -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு












Click it and Unblock the Notifications