மிக்ஜாம் புயல் நிவாரணம்.. ரூ 6 ஆயிரம் எப்போது கிடைக்கும்? டிசம்பரில் டபுள் டமாகா!
சென்னை: மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எப்போது நிவாரணத் தொகை கிடைக்கும் என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
மிக்ஜாம் புயலால் கடந்த டிசம்பர் 2, 3, 4 ஆகிய தேதிகளில் சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் பலத்த மழை கொட்டியது. இதனால் பல பகுதிகளில் வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்துவிட்டது. வீட்டில் வைத்திருந்த மின்சாதன பொருட்கள், பர்னிச்சர்கள் எல்லாம் வெள்ளத்தில் மூழ்கிவிட்டன.

மழை நின்று 7 நாட்களாகியும் சென்னையின் பெரும்பாலான இடங்களில் வெள்ள நீர் வடியவே இல்லை. கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் திங்கள்கிழமை காலை வரை சுமார் 100 மி.மீ. முதல் 200 மி.மீ மழை பெய்திருக்கும் என சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் அடுத்த ஒரு புயல் டிசம்பர் 9-ஆம் தேதி உருவாவதாகவும் அதுவும் சென்னையை தாக்கவிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின. ஆனால் டிசம்பர் 9ஆம் தேதி அரபிக் கடலில் காற்றழுத்தம் உருவானதாகவும், இதனால் தென் தமிழகம், கேரளாவில் மழை பெய்யும் என்றும் இதனால் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களுக்கு பாதிப்பு இல்லை என்றும் வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.
நேற்று முன் தினம் அரபிக் கடலில் புதிய காற்றழுத்தம் உருவானது. இதனால் கேரளா, தமிழகத்தின் தென் மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் மிக்ஜாம் புயலால் பலரது வீட்டில் தண்ணீர் புகுந்து பொருட்கள் சேதமடைந்த நிலையில் அதற்கான நிவாரணமாக ரூ 6 ஆயிரம் அறிவிக்கப்பட்டது.
இதற்காக ரேஷன் கடைகளில் இன்று முகாம் நடைபெறுகிறது. இந்த முகாமில் வெள்ளம் பாதித்த மக்கள் ஆதாரங்களுடன் விண்ணப்பித்தால் அரசின் நிவாரணம் ரூ. 6000 கொடுக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த ரூ. 6000 எப்போது வழங்கப்படும் என கேள்வி எழுந்த நிலையில் இந்த மாதமே ரூ. 6000 கிடைக்கும் என சொல்லப்படுகிறது.
மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட சென்னை, காஞ்சி உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் டிசம்பர் 15ஆம் தேதி மகளிர் உரிமைத் தொகை ரூ 1000 வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். இதன் பிறகு டிசம்பர் 16 அல்லது 17 தேதியில் வெள்ள நிவாரணம் ரூ 6000 ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. எனவே இன்று நடைபெறும் சிறப்பு முகாமில் ரேஷன் அட்டை உள்ளிட்ட ஆவணங்களை இழந்தவர்கள் விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
-
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு












Click it and Unblock the Notifications