அக்னி நட்சத்திரம் ஆட்டம் ஆரம்பம்.. கத்திரி வெயிலில் என்னவெல்லாம் செய்யக்கூடாது? என்ன செய்யலாம்?
சென்னை: அக்னி நட்சத்திரம் என்று சொல்லப்படும் கத்திரி வெயில் இன்று தொடங்குகிறது. கோடை வெயில் கடுமையாகச் சுட்டெரித்து வரும் நிலையில் இன்று தொடங்குகிறது அக்னி நட்சத்திரம். இந்த காலகட்டத்தில் கடுமையான வெப்பம் நிலவும் என்பதால் பொதுமக்கள் மதிய நேரத்தில் வெளியில் செல்வதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் என்னென்ன செய்யலாம்? என்னென்ன செய்யக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அக்னி நட்சத்திர காலகட்டத்தில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கு மேல் வெயில் பதிவாகும். இந்த ஆண்டு மார்ச் மாதம் முதலே பல இடங்களில் 100 டிகிரியை தாண்டி வெயில் கொளுத்தி வருகிறது. இந்நிலையில் இதோடு அக்னி நட்சத்திரமும் சேர்ந்து கொண்டுள்ளதால் மக்கள் கவலை அடைந்துள்ளனர்.

அக்னி நட்சத்திரம் என்பது என்ன?
பூமத்திய ரேகைக்கும், கடக ரேகைக்கும் இடையே சூரியன் பயணம் செய்யும் காலம் அக்னி நட்சத்திரம் என்றும், அக்னி நட்சத்திர காலத்தில் சந்திரன் மட்டுமல்லாமல் பூமியும் சூரியனுக்கு அருகில் இருக்கும் என்று சொல்லப்படுகிறது. அக்னி நட்சத்திர காலத்தின் நடுவில் உள்ள 7 நாள்கள் வெயில் மிகக் கடுமையாக இருக்கும்.
இந்து பஞ்சாங்க அடிப்படையில் அக்னி நட்சத்திரத்துக்கு ஒரு விளக்கம் சொல்லப்படுகிறது. சித்திரை மாதம் பரணி நட்சத்திரம் மூன்றாம் பாதத்தில் பிரவேசிக்கும் சூரியன் அதிலிருந்து கிருத்திகை நட்சத்திரம் வரையில் பயணிக்கும் காலமே அக்னி நட்சத்திர காலமாகக் கருதப்படுகிறது.
நடுவே ஒரு வாரம்
அக்னி நட்சத்திரம் காலம் என்பது 24 நாட்கள் ஆகும். அதுவும் 3 பகுதியாக பிரிக்கப்பட்டு வெப்பத்தின் தாக்கம் அளவிடப்படுகிறது. முதல் பகுதியில் வெயிலின் தாக்கம் குறைவாக இருக்கும். நடுவே இருக்கும் ஒரு வார காலம் கடுமையான அனல் வீசும். இந்த காலகட்டத்தில் மக்கள் உச்சி வெயிலில் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும்.
தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் மே 9 ஆம் தேதி வரை மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
வெப்பம் அதிகரிக்கும்
இதற்கிடையே, தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் இன்று அதிகபட்ச வெப்பநிலை வழக்கத்தைவிட 5 டிகிரி ஃபாரன்ஹீட் வரை உயர வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிகபட்ச வெப்பநிலை 38-39° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 29° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் கத்தரி வெயில் காலக்கட்டத்தில் வெயில் சுட்டரிக்கும் என்பதால் பொதுமக்கள் உச்சி வெயிலில் நடமாடுவதை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், அதனுடன் கடல் காற்று குறைந்து அனல் காற்று வீசும். தற்போது வரை தமிழ்நாட்டில் வெயிலின் அளவு 40 டிகிரி செல்சியஸ் என்ற அளவில் உள்ளது. அக்னி நட்சத்திர காலக்கட்டத்தில் 42, 43 டிகிரி செல்சியஸ் ஆக வெயிலின் அளவு உயரக் கூடும். இந்த மாதம் 28 ஆம் தேதியுடன் அக்னி நட்சத்திரம் நிறைவடைகிறது. அதன்பிறகு, வெயிலின் அளவு படிப்படியாக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வெப்பநிலை அதிகருத்து வருவதைக் கருத்தில் கொண்டு, பொது சுகாதாரம் மற்றும் மருத்துவ இயக்குநரகம் பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு விரிவான வழிகாட்டு ஆலோசனையை வழங்கி உள்ளது. அதன்படி,
என்ன செய்யலாம்?
1. மக்கள் நாள் முழுவதும் நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும்.
2. சூரியன் உச்சத்தில் இருக்கும் மதியம் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மக்கள் வீட்டிற்குள் இருக்க வேண்டும்.
3. அவசியம் வெளியில் செல்ல நேரிடும்போது, பாதுகாப்புக்காக குடை அல்லது தொப்பிகளைப் பயன்படுத்த வேண்டும்.
4. உடலுக்கு நீர்ச்சத்து கிடைக்க, வீட்டில் தயாரிக்கப்பட்ட பானங்களான எலுமிச்சை ஜூஸ், மோர், லஸ்ஸி மற்றும் பழச்சாறுகள் போன்றவற்றை ஒரு சிட்டிகை உப்புடன் சேர்த்து குடிக்கலாம்.
5. மேலும், நீர்ச்சத்து நிறைந்த தர்பூசணி உள்ளிட்ட பழங்கள் மற்றும் காய்கறிகளை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
என்ன செய்யக்கூடாது?
1. முடிந்தவரை நேரடியாக சூரிய ஒளியில் இருப்பதைத் தவிர்க்க வேண்டும்.
2. வெயில் உச்சமடையும் நேரங்களில் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும்.
3. வெயிலில் நிறுத்தப்பட்டுள்ள கார் போன்ற வாகனங்களுக்குள் குழந்தைகள் அல்லது செல்லப்பிராணிகளை விட்டுச் செல்வது கூடாது, ஏனெனில் வெயிலில் நிறுத்தப்படும் வாகனத்தின் உட்புற வெப்பநிலை ஆபத்தான முறையில் உயரக்கூடும்.
4. உடலில் நீர்ச்சத்து குறைவதற்குக் காரணமாக காபி, டீ மற்றும் மதுபானங்களை உட்கொள்வதை குறைத்துக்கொள்ள வேண்டும்.
5. வீட்டிற்குள் இருந்தாலும் உடல் வெப்பம் அதிகரிப்பதைக் தடுக்க, மதிய நேரங்களில் சமைப்பதை முடிந்தவரை தவிர்க்க வேண்டும்.
6. சூடான தரையில் வெறுங்காலுடன் நடப்பதையும், அதிக புரதம் அல்லது காலாவதியான உணவுகளை உட்கொள்வதையும் தவிர்க்க வேண்டும்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications