நாளை உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி.. டெல்டா மாவட்டங்களுக்கு பறந்த அலர்ட்.. உஷார்
சென்னை: தெற்கு அந்தமான் அதனை ஒட்டிய பகுதிகளில் நாளை நவம்பர் 23 ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி அடுத்த இரண்டு நாட்களில் தெற்கு வங்கக் கடலின் மத்தியப் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாகும் வலுப்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்டா மாவட்டங்களில் நவம்பர் 25, 26 ஆகிய தேதிகளில் கன மழைக்கு வெளுத்து வாங்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல்வேறு பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது. அதே நேரம் தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகியுள்ளது. இதனால் வங்கக்கடல் ஓரம் உள்ள மாவட்டங்களிலும், தென் மாவட்டங்களிலும் மழை தீவிரமெடுத்துள்ளது. வங்கக்கடலில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
தமிழ்நாட்டுக்கு இரண்டு பருவமழைகள் போதுமான அளவுக்கு மழையை கொடுக்கும். ஒன்று தென்மேற்கு பருவமழை. ஒவ்வொரு ஆண்டும் முதலில் தொடங்கும் பருவமழை இதுதான். இந்த ஆண்டும் ஜூலை மாதம் இது தொடங்கியது. எதிர்பார்த்ததைவிட அதிகமாகவே பருவமழை பெய்திருந்தது. குறிப்பாக கோவை, நீலகிரி, ஈரோடு என கொங்கு பெல்ட்டில் அதிக மழை பதிவாகியிருந்தது. தவிர தேனி தொடங்கி கன்னியாகுமரி வரையும் நல்ல மழை பதிவாகியிருந்தது.
வங்கக் கடலில் தெற்கு அந்தமானை ஒட்டியுள்ள பகுதிகளில் உருவாகியுள்ள மேலடுக்கு சுழற்சி நாளை (நவம்பர் 23 ஆம் தேதி) புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அடுத்த மூன்று நாட்களுக்கு தமிழ்நாட்டில் ஓரிரு மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
மேலும், டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், ராமநாதபுரம் ஆகிய பகுதிகளில் நவம்பர் 25, 26 ஆகிய தேதிகளில் மிக கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதேபோல, நவம்பர் 26 ஆம் தேதி கடலூர் மாவட்டத்தில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், ராமநாதபுரம் ஆகிய நான்கு மாவட்டங்களிலும் புதுச்சேரியிலும் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications