மே மாதமா இது? சென்னை உட்பட 21 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 2 மணி நேரம் உஷார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தென்மேற்கு பருவமழை இயல்பை விட இந்த ஆண்டு சற்று முன்னதாகவே தொடங்கியுள்ளது. எனவே தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் சென்னை உட்பட 20 மாவட்டங்களுக்கு அடுத்த 2 மணி நேரத்திற்கு ஆரஞ்சு மற்றும் மஞ்சள் அலர்ட் கொடுக்கப்பட்டிருக்கிறது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள அறிவிப்பில், "கோயம்புத்தூர், திருநெல்வேலி, தென்காசி, தேனி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழை பெய்யும். இம்மாவட்டங்களுக்கு இரவு 7 மணி வரை ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டிருக்கிறது.

chennai rain Tamil Nadu

அதேபோல சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, நீலகிரி, திருப்பூர், திண்டுக்கல், மதுரை, கரூர், விருதுநகர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் லேசனது முதல் மிதமானது வரை மழை பெய்யும். இம்மாவட்டங்களுக்கு இரவு 7 மணி வரை மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது" என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

முன்னதாக "இன்று (மே.30) தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

கோயம்புத்தூர், திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஒருசில இடங்களிலும், தேனி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் கன முதல் மிக கனமழையும், திருப்பூர் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

நாளை (மே.31) தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, தென்காசி, மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை வாய்ப்புள்ளது.

ஜூன்1 முதல் 5 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பை பொறுத்தவரை, இன்று (30-05-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் . நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான /மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35-36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28-29 செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

நாளை (31-05-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 36-37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28-29 செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்" என சென்னை வானிலை மையம் தெரிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+