நாங்க இருக்கோம்.. சென்னை மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ களத்தில் இறங்கிய அதிமுக ஐ.டி விங்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில், சென்னை வாழ் மக்கள் தங்களுக்கு தேவையான உதவிகளைப் பெற தங்கள் பகுதியில் உள்ள அதிமுக தன்னார்வலர்களை எந்நேரமும் தொடர்பு கொள்ளலாம் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், ஆரம்பமே அதிரடியாக தொடங்கியுள்ளது. நேற்று முன்தினம் நள்ளிரவிலும், நேற்று பகலிலும் கொட்டித் தீர்த்த கனமழையால் சென்னை மாநகரின் பல்வேறு சாலைகளிலும் நேற்று மழை நீர் தேங்கியது. தாழ்வான இடங்களில் குடியிருப்புகளுக்குள் மழைநீர் புகுந்தது. மழைநீரை வெளியேற்றும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

chennai rain tamil nadu rains

இந்நிலையில், அதிமுக சார்பில் அவசரகால தொடர்பு ஒருங்கிணைப்பு எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதிமுக ஐடி விங் ஒருங்கிணைப்பில் செயல்படும் இந்த தன்னார்வலர்களை தொடர்பு கொண்டு கேட்டால் வேண்டிய உதவிகள் கிடைக்கும் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், "மழை வெள்ளத்தால் தலைநகர் சென்னை தத்தளித்ததையும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த விடியா திமுக அரசு மக்களை கைவிட்ட அவலத்தையும் சென்ற ஆண்டே பார்த்தோம். எனவே தான், உதவ அதிமுக ஐ.டி விங் சார்பில் Rapid Reponse Team அமைத்து, #களத்தில்_அஇஅதிமுக பாதிக்கப்பட்ட மக்களுடன் தோளோடு தோள்நின்றது.

தற்போது தலைநகர் சென்னையில் கனமழை பெய்துவரும் நிலையில், எனது அறிவுறுத்தலின்படி, அதிமுக ஐ.டி விங் சார்பில் மீண்டும் #RapidResponseTeam அமைக்கப்பட்டுள்ளது.

சென்னைவாழ் பொதுமக்கள் இந்த கடுமையான தருணத்தில் தங்களுக்கு தேவையான உதவிகளைப் பெற தங்கள் பகுதியில் உள்ள கழகத் தன்னார்வலர்களை எந்நேரமும் தொடர்பு கொள்ளலாம். இந்த செயலற்ற விடியா திமுக அரசைப் போல் அன்றி மக்கள் மீது அக்கறையோடு என்றைக்கும் அதிமுக உழைக்கும்." எனத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, சென்னையில் மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்தார். திமுக அரசு பொறுப்பேற்றதில் இருந்து மேற்கொண்ட வெள்ள தடுப்புப்பணிகள் குறித்து அறிக்கை வெளியிடவேண்டும். வெள்ள நீர் தேங்குவதில் இருந்து பாதுகாக்க அமைத்த குழு அளித்த அறிக்கை மீது எடுத்த நடவடிக்கை என்ன? எனக் கேள்வி எழுப்பி இருந்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+