பயம் காட்டும் பருவமழை.. கரண்ட் விஷயத்தில் கவனம் ப்ளீஸ்! இதை செய்யாதீங்க.. EB அறிவுறுத்தல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், மின்சார விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும் என்று தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவுறுத்தியுள்ளது. மழை காலங்களில் பின்பற்ற வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்னென்ன? என்பது குறித்தும் வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது.

நவம்பர், டிசம்பர் வந்தாலே பருவமழையை கையில் புடிக்க முடியாது. அந்த அளவுக்கு ஆட்டம் காட்டிவிடும். ஆனால் இந்த முறை அக்டோபர் மாதத்திலேயே தனது வேலையை மழை காட்ட தொடங்கிவிட்டது. போதாத குறைக்கு வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலு பெற்று, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. இது எல்லாம் சேர்ந்து சென்னைக்கு இடியை இறக்கியுள்ளது.

weather chennai rain tamil nadu rains tneb

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் என சென்னையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் மின்சார விஷயத்தில் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று மின்வாரியம் அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பாக விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பில்,

"வீடுகளில் மின் இணைப்பிற்கான சர்வீஸ் மெயின் அருகில் ELCBஐ பொருத்தினால், வீடுகளில் மின் கசிவினால் ஏற்படும் விபத்துகளை தவிர்க்கலாம்.

ஈரக்கையால் சுவிட்சுகளை இயக்கக்கூடாது. மேலும் குளியலறையிலும், கழிவறையிலும் ஈரமான இடங்களில் சுவிட்சுகளைப் பொருத்தக்கூடாது.

ப்ரிட்ஜ், - கிரைண்டர், மிக்ஸி, மோட்டார், இஸ்திரி பெட்டி போன்றவற்றிக்கு நில இணைப்புடன் (Earth) கூடிய மூன்று பின் உள்ள பிளக்குகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

பிளக் பாயிண்ட்களில் மின்சார வயர்களை பிளக்கு உபயோகிக்காமல் பயன்படுத்தக்கூடாது

உடைந்த சுவிட்சுகள், பிளக்குகள், பழுதுபட்ட ஒயர்கள், மற்றும் பழுதான மின் சாதனங்கள் உங்கள் பயன்பாட்டில் இருப்பின், அவற்றை தாமதமின்றி புதுப்பித்துக்கொள்ள வேண்டும்.

சுவிட்சுகள், பிளக்குகள் போன்றவற்றை குழந்தைகளுக்கு எட்டாத உயரத்தில் அமைக்க வேண்டும் . குழந்தைகளை சுவிட்ச் போடச்சொல்லி விளையாட்டு காட்டுதல் கூடாது

விவசாய நிலங்களில் மின்சார வேலி அமைப்பது சட்டப்படி குற்றமான செயலாகும். மின்சார வேலி அமைப்பதனால் மனிதர்களுக்கும், கால் நடைகளுக்கும் மின் விபத்து ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படும்.

இடி, மின்னல், காற்று மற்றும் மழைக்காலங்களில் மின் கம்பங்கள், மின் மாற்றிகள், மின் கம்பிகள், மின்பகிர்வு பெட்டிகள் மற்றும் ஸ்டே கம்பிகள் அருகில் செல்ல வேண்டாம்

மின் மாற்றிகள் மற்றும் மின்பகிர்வு பெட்டிகள் அருகே தண்ணீர் தேங்கியிருக்கும் போது அதன் அருகே செல்லக்கூடாது.

மின் கம்பிகள் அறுந்து விழுந்தால் அதன் அருகில் செல்வதோ அதனை தொட முயற்சிப்பதோ கூடாது. அது குறித்து அருகிலுள்ள மின் வாரிய அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும்

மேல் நிலை மின் கம்பிகளுக்கு அருகில் உள்ள மரக்கிளைகளை வெட்ட, மின் வாரிய அலுவலர்களை அணுக வேண்டும்.

மின் கம்பத்திலோ, மின் கம்பத்திற்கு போடப்பட்ட ஸ்டே வயரிலோ, மின் இணைப்பிற்கான சர்வீஸ் பைப் அல்லது சப்போர்ட் பைப்பிலோ கொடிகள் கட்டி துணிகளை காய வைக்கக் கூடாது.

மின் கம்பத்திலோ, அதை தாங்கும் கம்பிகளிலோ கால்நடைகளை கட்டக்கூடாது

மின்சார கம்பிகளுக்கு அடியில் கட்டிடங்கள் கட்டுவதை தவிர்க்க வேண்டும்.

டிரான்ஸ்பார்மர்கள், துணை மின் நிலையங்களைச் சுற்றி போடப்பட்டுள்ள வேலியின் அருகில் சிறுநீர் கழிக்கக் கூடாது.

வீடுகளில்,மின் கம்பங்களில் மற்றும் மின் மாற்றிகளில் ஏற்படும் பழுதுகளை பொதுமக்கள் தாமாக சரிசெய்ய முயலக் கூடாது. மின் வாரிய அலுவலகத்தை தொடர்பு கொண்டு நிவர்த்தி செய்துகொள்ள வேண்டும்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+